விஜய் நடித்து வரும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லாமல் தமிழகத்தில் வேறு பகுதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லலித் தயாரித்து வருகிறார்.
பான் இந்திய பாடமாக உருவாகி வரும் லியோ படத்தின் மீது பரிய எதிர்பார்ப்பு எழுந்துள்’ள நிலையில், படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாகும் என்று படப்பிடிப்பு தொடங்கும் முன்பு வெளியிட்ட டீசரில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து லியோ படம் குறித்து பல அப்டேட்கள் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக எந்த அப்டேட்டும் வரவில்லை.
இதனால் சோர்ந்து கிடந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் லலித் புத்துணர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், லியோ ஆடியோ லான்ஜ் குறித்து கேட்டப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ஒருமுறை நான் லோகேஷ் விஜய் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது படத்தின் ஆடியோ லான்ஜ் எங்கே வைக்கலாம் என்று பேசப்பட்டது.
சென்னை நேரு ஸ்டேடியம் என்று நான் சொன்னேன். அதற்கு விஜய் எத்தனை முறை அங்கேயே நடத்துவது. நான் ஆடியோ லான்ஜ் சென்னையில் இருந்து வெளியில் பண்ணி பல ஆண்டுகள் ஆகிறது. அதனால் இந்த முறை கோவை, திருச்சி மதுரை இப்படி எங்காவது வைக்கலாம். நான் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று விஜய் கூறினார். இதனால் ஆடியோ லான்ஜ் எங்கே வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“