ரிலீஸ் நெருங்கும் லியோ... திடீரென போஸ்டரை மாற்றி படக்குழு : சர்ச்சை தான் காரணமா?

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், திடீரென படக்குழு போஸ்டரில் மாற்றம் செய்துள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், திடீரென படக்குழு போஸ்டரில் மாற்றம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Poster VIjay

லியோ படத்தில் விஜய்

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலுக்கான போஸ்டரை படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.

Advertisment

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 19-ந் தேதி படம் பிரம்மாண்டாக வெளியாக உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தின் லியோ படத்திற்கான முன்பதிவு ஏற்று தொடங்கியது.

மேலும் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதனிடையே லியோ படம் வெளியாக இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், நா ரெடிபாடலின் போஸ்டரை படக்குழுவினர் தற்போது மாற்றியுள்ளனர். கடந்த மாதம் வெளியிடப்பட்ட 'நா ரெடி' பாடலை விஜய் பாடியிருந்தார்.

இந்த பாடலுக்கான போஸ்டரில் விஜய் துப்பாக்கியை வைத்துக்கொண்டு சிகரெட் பிடிப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் இந்த போஸ்டர் இளைஞர்கள் மத்தியில் தவறான ஒரு முன்னுதாரதனத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கடுமையான விமர்சித்திருந்தனர். இதனிடையே தற்போது இந்த போஸ்டர் மாற்றப்பட்டு புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதரில் விஜய் சிகரெட் பிடிக்காமல் துப்பாக்கியை மட்டும் பிடித்தபடி உள்ளார்.

Advertisment
Advertisements

Leo Vijay Secret

படம் முழுவதும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளில் ஒரு மறுப்பு டேக் சேர்த்துள்ளனர். ஆனால் காட்சிகளை குறைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பாடலை அறிவித்து புதிய போஸ்டரை பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அனிருத் ரவிச்சத்னர் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையமைப்பாளர்கள் இப்படத்தின் 'நா ரெடி', 'பேடாஸ்' மற்றும் 'அன்பென்னும்' ஆகிய மூன்று பாடல்களை வெளியிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: