விஜய் நடிபபில் வெளியாக உள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தாலும் முதல் காட்சி காலை 9 மணிக்குதான் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்திய சினிமா மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று லியோ. தளபதி விஜய் நடித்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள நிலையில், முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளர்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இதனிடையே அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கு 5 நாட்கள் தினமும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இதன் காரணமாக லியோ படத்திற்கான முதல் காட்சி நகரங்களில் காலை 4 மணிக்கும், வெளியிடங்களில் காலை 7 மணிக்கும் திரையிடப்படும் என்று கூறப்பட்டு வந்தது. 5 காட்சிகள் திரையிட மட்டுமே அனுமதி அளித்திருந்த தமிழக அரசு முதல் காட்சி எப்போது திரையிட வேண்டும் என்ற எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இதனிடையே இந்த குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில் தற்போது தமிழகத்தில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடலாம் என்பதால் இளவு 1.30 மணி வரை படத்தை திரையிடலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிறப்பு காட்சிகளில் விதிமீறல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவின் மூலம் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“