லியோ படத்தின் வெற்றி விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அவரை பார்க்க ரசிகர்கள் பலரும் திரண்டு வந்துள்ளனர். இதனால் அரங்கத்தின் உள்ளே செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான படம் லியோ. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சன்ஙகளை பெற்றிருந்தாலும், வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போதுவரை லியோ படத்தின் வசூல் 500 கோடிகளை கடந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நவம்பர் 1-ந் தேதி (இன்று) லியோ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளைாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் 30-ந் தேதி நடைபெற இருந்த லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா போலி டிக்கெட், மற்றும் காவல்துறை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்திருந்தாலும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தாமதாமாகத்தான் லியோ படம் வெளியானது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இவர்களின் ஏமாற்றத்திற்கு ஈடு செய்யும் விதமாக தற்போது லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், விஜய் என்ன பேசுவார், குட்டி கதை சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜயை காண ரசிகர்கள் பலரும் சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு படையெடுத்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்கள் தங்கள் ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும் என்றும், உள்ளே செல்லும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது பரவலாக மழை பெய்து வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் ரசிகர்கள் விஜயை காண மக்கள் இயக்க கொடியுடன் திரண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“