லோகேஷ் கனகராஜ் இயகக்த்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது லியோ படத்தில் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்’ கனகராஜ் நடிகர் விஜய் இருவரும் 2-வது முறையாக இணைந்துள்ள படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம்மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். லியோ படத்தின் முதல் பாடலான நான் வரவா என்ற பாடல் வெளியானி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Keep calm and prepare for battle 🔥#LeoTamilPoster#LEO 🔥🧊 pic.twitter.com/J39jSyTbVa
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 20, 2023
தொடர்ந்து விரைவில் லியோ படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே லியோ படம் வெளியான இன்னும் சாரியாக ஒரு மாத காலம் உள்ள நிலையில், இன்றிலிருந்து லியோ ஆட்டம் ஆரம்பம் என்று சொல்லும் வகையில், படத்தின் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
'லியோ' தமிழ் போஸ்டர் அவுட்
தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்களை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதே போல், தளபதி விஜய், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், கையுறைகளுடன் வாள் போன்ற ஆயுதத்தை பட்டை தீட்டுவது போன்ற பபோஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், "அமைதியாக இருந்து போருக்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Keep calm and plot your escape#LeoKannadaPoster#LEO 🔥🧊 pic.twitter.com/EsfFcTml4t
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 18, 2023
லியோ தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்கள்
'லியோ' தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன, மேலும் ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. லியோ படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 30-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.