New Update
/indian-express-tamil/media/media_files/0U8Tk7iCqLHyAFGoRlbw.jpg)
லியோ படத்தின் 3-வது சிங்கிள்
லியோ படத்தின் 3-வது சிங்கிள்
தளபதி விஜய் – த்ரிஷா இணைந்து நடித்துள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் த்ரிஷா இருவரின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' லியோ திரைப்படத்தில் 15 வருடங்களுக்கு பிறகு விஜய் த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோடியாக வலம் வரும் இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிலையில், இந்த படத்தில் இருவரும் கணவன்-மனைவியாக நடித்துள்ளனர்.
லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காரணங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய் மற்றும் த்ரிஷாவின் காட்சிகள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மேலும் அழகான ஜோடி குறித்து ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியதால் அவை வைரலானது. லியோ படத்தின் 3-வது சிங்கில் இன்று (அக். 11) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காட்சிகள் இந்த பாடலின் காட்சிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் இணையத்தில் லீக் ஆனா படங்களைப் வெளியிட்டள்ள சமூக வலைதளங்களின் அட்மின் மீது தயாரிப்பாளர்கள் புகார் அளித்து நடவடிக்கைகளை எடுத்துள்ளனர், மேலும் அவர்கள் கடுமையான எச்சரிக்கையை அனுப்பியுள்ளனர். லியோ படத்தின் 3-வது பாடலான 'அன்பெனும்' என்ற இன்று வெளியாகிறது. விஜய் மற்றும் த்ரிஷா இடம்பெறும் உணர்ச்சிகரமான குடும்பப் பாடல் படத்தின் தொடக்கப் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ள, அனிருத் ரவிச்சந்தர் மற்றொரு சுவாரசியமான ஒன்றைக் கொண்டு வருகிறார், அதே நேரத்தில் பாடலுக்கான பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.