Advertisment
Presenting Partner
Desktop GIF

இந்தியா தாண்டி சாதனை படைக்கும் 'லியோ' : வெளிநாட்டு விநியோகம் எவ்வளவு தெரியுமா?

ஹாலிவுட் மற்றும் இங்கிலாந்து மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில், ஒரு தமிழ் படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Leo

லியோ விஜய்

இந்திய படங்களின் வெளிநாட்டு வசூல் சாதனைகளை மாற்றியமைக்க ஒரு படம் வருமா என்ற கேள்வி இருந்தாலும், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஒரு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை தளபதி விஜய் கொடுப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisment

இந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கிய படங்களில் ஒன்று லியோ. இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் வெளியீட்டுக்கு முன்பான வசூல் நிலவங்கள் குறித்து வெளியான தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய திரையரங்குகளில் ஒரு பிளாக்பஸ்டர் படத்தை வெளியிட உள்ளது. அதற்காக விஜய் நடித்து வரும் லியோ படத்தை வாங்குவதற்காக அந்நாட்டின் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். லண்டன் மற்றும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியத் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான அஹிம்சா என்டர்டெயின்மென்ட், 2022 ஆம் ஆண்டில் விதுர்ஸ் மற்றும் சுதர்சன் நடேசன் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனம் அதன் வெளிநாட்டு விநியோக வலையமைப்பை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களை வெளிநாட்டில் விநியோகம் செய்து வருகிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இந்திய மொழி திரைப்படங்களாக தளபதி விஜய்யின் "வாரிசு" மற்றும் "பீஸ்ட்" ஆகிய படங்கள் வெற்றிகரமாக வெளிநாட்டு விநியோகங்களை செய்துள்ள இந்நிறுவனம் இந்த திரைப்படங்களில் சாதனை முறியடிக்கும் வெற்றியைப் பெற விஜயின் லியோ படத்தை விநியோகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது. வாரிசு மற்றும் பீஸ்ட் படங்களில் புள்ளி விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆனாலும் லியோ படத்தின் இங்கிலாந்து  மற்றும் ஐரோப்பிய உரிமைகளுக்கான விலை இதுவரை இல்லாத வகையில் ₹14-18 கோடிகள் (INR), தோராயமாக $2 மில்லியன் (USD) என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் விநியோகத்திற்காக இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை இது என்று கூறப்படுகிறது.  இதன் மூலம் விஜயின் லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

லியோ படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியதன் மூலம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இந்திய சினிமாவின் வெளிநாட்டு விநியோகத்திற்கான முக்கிய நிறுவனமான மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் சாதனைப் பதிவைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள விஜய் மற்றும் இந்திய சினிமாவின் ரசிகர்கள் லியோ படத்தை வெளியீட்டை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.,

தளபதி விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் ஆகியோர் லியோ படத்திற்கு விமர்சன ரீதியான பாராட்டு மற்றும் வணிக வெற்றி ஆகிய இரண்டையும் பெறும் தரமான படத்தை தயாரிப்பாளர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அஹிம்சா எண்டர்டெயின்மென்ட் இதற்கு முன்பு விநியோகம் செய்த தளபதி விஜய்யின், "வாரிசு" மற்றும் "பீஸ்ட்" படங்களின் வெற்றியைப் பார்க்கும்போது, "லியோ" படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாலிவுட் மற்றும் இங்கிலாந்து மொழி படங்கள் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில், ஒரு தமிழ் படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது உலகளாவிய திரைப்படத் துறையின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது. இந்த மாற்றத்தின் முக்கிய காரணம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான். தடைகளை உடைத்து, இந்திய திரைப்படங்கள் சர்வதேச அரங்கில் அவற்றின் சரியான இடத்தைப் பெறுவதை உறுதிசெய்ய சரியான விநியோகம் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment