விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு 5 நாட்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி அளித்துள்ள தமிழக அரசு படததிற்காக அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்றும், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் லியோ படம் முன்னதாகவே வெளியாக உள்ள நிலையில், தமிழக்கத்தில் காலை 9 மணிக்கு முதல்காட்சி என்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது 'லியோ' படத்திற்கான முதல் நாள் முதல் காட்சி தமிழ்கத்தில் தாமதமானதால், ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே 'லியோ' படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழகத்தில் சிறப்பு காலை காட்சிகளுக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த நீதிமன்றம், 'லியோ' தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த சிறப்பு வழக்கின் விசாரணையை நாளை (அக்., 17) காலை ஒத்திவைத்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறதா அல்லது தமிழக அரசின் உத்தரவை ஏற்று நடத்துகிறதா என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம், திரைப்பட நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, மதுரை பெஞ்சில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சரிபார்க்க கால அவகாசம் கோரியதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், ரிட் மனு மீதான விசாரணையை அக்டோபர் 17, 2023 (நாளை) ஒத்திவைத்தார். மேலும் இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே 'லியோ' படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“