பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதுச்சேரியில் நடிகர் விஜய்யின்‘லியோ’ திரைப்படத்திற்கு காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாகிறது. இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.
இதுமட்டுமின்றி ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“