சிம்பு திருமணம் செய்து உண்மையா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வரும் சிம்பு குறித்து அவ்வப்போது பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இதில் சமீப காலமாக சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும். அவர் இலங்கை பெண்னை மணக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை மறுத்துள்ள சிம்பு தரப்பு இது பொய்யான தகவல் என்றும், திருமணம் முடிவானால் மீடியாவில் அறிவிப்போம் என்று அவரது மேனேஜர் கூறியுள்ளார்.
விஜயை வீழ்த்திய நடிகர் தனுஷ்
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் கடந்த 17-ந் தேதி வெளியான படம் வாத்தி. ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான வாத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே வாத்தி 8 நாட்களில் 75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 30 கோடி ரூபாயும், ஆந்திராவில் 24.4 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இதன் மூலம் பொங்கல் தினத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் வசூலை வாத்தி ஓவர் டேக் செய்துள்ளது.
லியோ படத்தின் கேரளா உரிமம் இத்தனை கோடியா?
வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சேட்டிலைட், ஒடிடி உள்ளிட்ட உரிமைகள் விற்பனையாகிவிட்டது. இதனிடையே தற்போது லியோ படத்தின் கேரளா உரிமம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதில் லியோ படம் 16 கோடிக்கு கேரளா விநியோகஉ உரிமம் 16 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் தனுஷ் தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், சென்னை போயஸ் கார்டனில் 150 கோடி செலவில் அவர் கட்டி வந்த வீட்டின் கிரகபிரவேசம் சமீபத்தில் நடைபெற்றது. தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்துவிட்டதால் இதில் ஐஸ்வர்யா கலந்துகொள்ளாத நிலையில், தனுஷின் மகன்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே தற்போது மகன்களில் பள்ளி ஸ்போர்ஸ் டே விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இளைஞர்களை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் கைது
மலையாளத்தில் வயது வந்தோருக்கான படமாக யெஸ்மா சீரிஸ் என்ற தொடர் மலையாள ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஒடிடி தளத்தில் நான்சி மற்றும் செல் என இரண்டு வெப் சிரீஸ் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு சிரீஸ்களையும் லட்சுமி தீப்தா என்பவர் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அனைத்து சிரீஸ்களும் அந்தரங்க காட்சிகள் அதிகமான இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே தன்னை கட்டாயப்படுத்தி இந்த ஆபாச படத்தில் நடிகை வைத்ததாக இயக்குனர் லட்சுமி தீப்தா மீது படத்தில் நடித்த சிலர் புகார் அளித்துள்ளனர். இதன் மூலம் அவர் விபச்சாரம் செய்வதாகவும் புகார் கூறியுள்ள நிலையில், லட்சுமி தீப்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“