வரலட்சுமி திருமணம் எப்போது? சரத்குமார் பதில்
நடிகர் சரத்குமார் கடந்த 1984-ம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பூஜா வரலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். 2000-ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த சரத்குமார் அடுத்து நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே சமீபத்தில் நடிகை வரலட்சுமி திருமணம் குறித்து பேசியுள்ள சரத்குமார், அவர் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்துவிட்டேன் என்று எப்போது சொல்கிறாரோ அப்போது அவருக்கு திருமணம் செய்து வைப்பேன். அது அவரின் விருப்பம் என்று கூறியுள்ளார்.
பிரபல நடிகருடன் நெருக்கமாக வனிதா
தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களை கையில் வைத்துள்ள நடிகை வனிதா விஜயகுமார், தனியாக பிஸினஸ், யூடியூப் சேனல், என பிஸியாக இருந்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பவர்ஸ்டாருடன் நெருக்கமாக அவரது கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
லியோவுக்கு போட்டியாக சூர்யா 42
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்படிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 19-ந் தேதி லியோ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியீட்டுக்கு முன்பாகவே ரூ400 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது. இதனிடையே சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் சூர்யா 42 படம் வெளியீட்டுக்கு முன்பே சுமார் 500 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
பான் இந்தியா படத்திற்கு கதை எழுதிய அர்ஜூன்
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட நடிகர் அர்ஜூன், தற்போது கன்னடத்தில் பான் இந்தியா படமாக தயாராகி வரும் மார்ட்டின் என்ற படத்திற்கு கதை எழுதியுள்ளார். ஏ.பி.அர்ஜூன் இயக்கி வரும் இந்த படத்தில், அர்ஜூனின் சகோதரி மகன் துரூவ் சார்ஜா நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சந்தீப் கிஷான் படத்திற்கு தடை
தமிழில் மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த் சந்தீப் கிஷான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மைக்கேல். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய இந்த படத்தில் கவுதம் மேனன், விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பிப்ரவரி 2-ந் தேதி வெளியான இந்த படம் சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. விதிப்படி படம் வெளியானி 4 வாரங்களுக்கு பிறகே ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டும். ஆனால் 3 வாரங்களிலேயே மைக்கேல் படம் வெளியாகிவிட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil