தமிழகத் திரைப்படத்துறையில் லைட் டெக்னீசியனாக பல படங்களில் பணியாற்றி வந்த மணிமாறன் சென்னையில் காலமானார். சிறுநீராக கோளாறு காரணமாக மணிமாறன் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விஷ்ணு விஷால், பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மணிமாறன் இறப்புக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
பாபி சிம்ஹா தனது முகநூல் பதிவில், எனது முதல் படமான பீட்சா திரைப்படத்தில் இருந்து உங்களைப் பார்த்திருக்கிறேன். "இன்னம் பெருசா வரணம் தம்பி" என்று சொல்லி என்னை ஊக்குவித்தீர்கள். உங்களது முகம் எப்போதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். மணி அண்ணா நீங்கள் இனி எங்களுடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியாது. உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்
நடிகர் விஷ்ணு விஷால், தனது ட்விட்டர் பதிவில்," மற்றொரு கெட்ட செய்தி ... மணிமாறன் அண்ணன் மிகவும் இனிமையானவர். எப்போதும் ஆற்றல் நிறைந்தவராகவும் இருந்தார் .. அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன் ... கடவுளே அனைத்தையும் இத்தோடு நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் கிருஷ்ணா தனது ட்விட்டரில், "மணிமாறன் அண்ணன் எல்லாவற்றிற்கும் மேலாக வேடிக்கையை விரும்பும் மனிதர் ..... அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தெரிவித்தார்.
ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பதிவில், "
சினிமாவில் நான் சந்தித்த மிக நேர்மையான மனிதர்களில் ஒருவர்! சினிமாத் துறையில் உள்ள சவால்கள் பற்றி எனக்கு நிறைய அறிவுரைகள் வழங்கியவர்! அவர் லைட்மேன் துறையில் பணியாற்றினார் !! #RIP அண்ணா" என்று தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil