/indian-express-tamil/media/media_files/2025/08/19/lkr-2025-08-19-11-03-44.jpg)
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் மாஸ் காட்டி வரும் நிலையில், இயக்குனர் லேகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படம் குிறத்து அப்டே் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் பாடம் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் அட்டகாசம் செய்து வருகிறது. 4 நாட்களில் சுமார் 400 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் 38 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் – சத்யராஜ் இணைந்து நடித்திருந்த நிலையில், நாகர்ஜூனா வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் வில்லத்தனத்தில் மிரட்டிய நிலையில், அமீர்கான், மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சன்பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கைதி படத்தை முடித்தவுடன் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ், அடுத்து கைதி 2 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அடுத்து கமல்ஹாசன் விக்ரம் பட வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும், விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கிய லோகேஷ், அடுத்து கைதி 2 படத்தை இயக்க தயாரானபோது, ரஜினிகாந்த், கூலி படத்தை இயக்குமாறு கூறியுள்ளார்.
#LokeshKanagaraj Met Superstar & KamalHaasan before #Coolie release & narrated a Duel Hero subject to them😲🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) August 19, 2025
Both Superstar #Rajinikanth & #KamalHaasan met recently & are happy to do the film♥️. If the project gets materialized further, RKFI will produce the film🎬
Also… pic.twitter.com/owxTroqgqY
இதனைத்தொடர்ந்து உடனடியாக கூலி படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து லோகேஷ் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரின் புதிய படம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரையும் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் கூலி படத்தின் ரிலீஸ்க்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
#LokeshKanagaraj Met Superstar & KamalHaasan before #Coolie release & narrated a Duel Hero subject to them😲🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) August 19, 2025
Both Superstar #Rajinikanth & #KamalHaasan met recently & are happy to do the film♥️. If the project gets materialized further, RKFI will produce the film🎬
Also… pic.twitter.com/owxTroqgqY
கூலி படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவரையும் சந்தித்து டூயல் ஹீரோ கதையை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஜினி – கமல் இருவரும் சந்தித்து பேசி இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த படம் முடிவு செய்யப்பட்டால், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் என்றும், இந்த அறிவிப்பு வெளியானால், லோகேஷ் படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வார் என்பது குறித்து விபரங்கள் வெளியாகும் என்ற தகவல் தற்போது இணையத்தில் சுற்றி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.