சரத்குமார் படம் ஓடாது: பிரபலங்கள் பேச்சை கேட்டு விஜய் படத்தை ரிலீஸ் செய்த தயாரிப்பாளர்: 1997-ல் வெற்றி யாருக்கு?
விஜய் சரத்குமார் நடித்த படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வந்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சரத்குமார் நடித்த படம் ஓடாது என்று சொன்னதால், விஜய் படத்தை முதலில் ரிலீஸ் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை இயக்கி வெற்றி கண்டவர் விக்ரமன். இவர் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஒரு படம் சரியாக போகாது என்று நினைத்து அந்த படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துவிட்டு, விஜய் நடித்த லவ் டுடே படத்தை வெளியிட்டுள்ளனர்.
Advertisment
1990-ம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரன். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து புதிய மன்னர்கள், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன். கோகுலம், உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், விஜய்க்கு திரையுலகில் முக்கிய படமாக அமைந்த பூவே உனக்காக படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் விஜய்க்கு அதிகமான பெண் ரசிகைகளை பெற்று தந்தது.
தொடர்ந்து வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரமன், 1997-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் சூர்யவம்சம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில், சக்திவேல், சின்ராசு என இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் தேவயானி, ராதிகா, மணிவண்ணன், சுந்தர்ராஜன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அப்பா – மகன் இடையேயான பிரச்னையை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது.
Advertisment
Advertisements
இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிபடமாக அமைந்த நிலையில், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். சூர்யவம்சம் படம் தயாராகும்போதே விஜய் நடிப்பில், லவ் டுடே படத்தையும் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வந்தார். சூர்யவம்சம் படம் ரிலீஸ்க்கு தாயரான நிலையில், படத்தை பார்த்த பலரும் இந்த படம் ஓடாது நாட்டாமை அளவுக்கு இல்லை என்று கூறியுள்ளனர்.
பலரும் சூர்யவம்சம் ஓடாது என்று சொன்னதால், இந்த படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த ஆர்.பி.சௌத்ரி, அந்த நேரத்தில் விஜயின் லவ் டுடே படத்தை ரிலீஸ் செய்துள்ளார். 1997-ம் ஆண்டு மே 9 ந் தேதி லவ்டுடே படம் வெளியானது. அதன்பிறகு, 48 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, ஜூன் 27-ந் தேதி சூர்யவம்சம் படம் வெளியாகியுள்ளது. வெளியீட்டை தள்ளி வைத்ததை எப்படி விக்ரமனிடம் சொல்வது என்று யோசித்த ஆர்.பி.சௌத்ரி, விக்ரமன், ஒரு பாடல் காட்சி படமாகனும்னு சொன்னீங்களே அதை செய்யுங்க என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு தான், சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற காதலா காதலா என்ற பாடல் படமாக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தாமதமாக வெளியானாலும் சூர்யவம்சம் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த தகவலை அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.