உலக காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடல ஆசிரியராக அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வைரமுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக வலம் வருகிறார்.
மேலும் முதல் மரியாதை, தென்மேற்கு பருவக்காற்று, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல படங்களில் பாடல் எழுதியதற்காக கவிஞர் வைரமுத்து தேசிய விருதை வென்றுள்ளார். அதேபோல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் வைரமுத்து முக்கியமான நாட்களில் கவிதைகள் மூலம் வாழ்த்து தெரிவிப்பது, பிரபலலங்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று உலக காதலர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள கவிதை ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.
எந்த நிலையிலும் வரலாம்
எந்த வயதிலும் வரலாம்
அது ஒன்றல்ல
ஒன்றிரண்டு மூன்று
நான்கென்று எண்ணிக்கை ஏறலாம்
ஆனால், என்னதான் அது என்ற
இருதயத் துடிப்புக்கும், எப்போதுதான் நேரும் என்ற
உடலின் தவிப்புக்கும்
இடைவெளியில் நேருகின்ற
துன்பம் குழைத்த இன்பம்தான் காதல்
அந்த
முதல் அனுபவம் வாழ்க
என்று பதிவிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த கவிதை தொடர்பான ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil