பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள உதயநிதியின் மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜூவுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது பெரும் வைரலாக பேசப்பட்டு வரும் படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். அரசியல் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தபடத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் குறித்து பேசிய சர்ச்சை கருத்து இணையத்தில் வைரலாகி அவருக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்தாலும், படம் வெளியான பின் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் இது முன்னாள் சபாநாயர் தனபாலின் வாழ்க்கை தான் என்று பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில், படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்ட நிலையில், மாமன்னன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதால், உற்சாகத்தில் இருக்கும் உதயநிதி, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் சம்பளத்தை வாரி வழங்கி வருகிறார். இதில் மாமன்னன் கேரக்டரில் நடித்த வடிவேலுவுக்கு ரூ3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும், வில்லன் பகத் பாசிலுக்கு 2 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
அந்த வகையில் தற்போது படத்தை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜூக்கு ரூ 5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியளாகியுள்ளது. இது மாரி செல்வராஜூன் திரை வாழ்க்கையில் அதிகபட்ச சம்பளமாகும். ஏற்கனவே மாமன்னன் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மாரி செல்வராஜூக்கு உதயநிதி 50 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் காரை பரிசளித்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“