மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி வரும் நிலையில், மாரி செல்வராஜ் வைத்த சீன் அவருக்கே ரியலாக நடந்துள்ளது என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Advertisment
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29-ந் தேதி வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மாமன்னன் திரைப்படம் இதுவரை 40 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று பலரும் பாராட்டி வரும் நிலையில், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் மாமன்னன் என்றும், தனபால் கேரக்டரில் வடிவேலு, எடப்பாடி பழனிச்சாமி கேரக்டரில் பகத் பாசில் என்று ட்ரோல் செய்தது வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாமன்னன் ரீல் மற்றும் ரியல்
Advertisment
Advertisements
மேலும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் தேவர்மகன் படம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக கமல்ஹாசனை சந்தித்து இந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கோரிய மாரி செல்வராஜ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இதனிடையே மாமன்னன் படத்தில் பட்டியல் இள வேட்பாளர் ஒருவருக்கு பகத் பாசில் பிளாஸ்டிச் சேர் போட்டு அமர வைக்கும் கட்சி உள்ளது.
இதேபோல் தற்போது திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் சேர் வழக்கப்பட்ட புகைகப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் உதயநிதி சோபாவில் உட்கார்ந்திருக்க, வடிவேலு மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது உதயநிதி வீடு இல்லை என்றும் வடிவேலு வீட்டில் தான் உதயநிதியை சோபாவில் அமர வைத்து அழகு பார்த்தாகவும் உதயநிதி விஸ்வாசிகள் கூறி வருகின்றனர். தனது வலியை படத்தில் வைத்த மாரி செல்வராஜூக்கே ரியல் லைஃபில் எதுவும் மாறாது என்று சொல்லாமல் சொல்கிறார்களா என்று கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“