/tamil-ie/media/media_files/uploads/2023/07/Maaveran.jpg)
மாவீரன் பட ப்ரிரிலீஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா இயக்குனா மடோன் அஸ்வின் இயக்கியுள்ள மாவீரன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-118.png)
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகரான உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நுழைந்த இவர், எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் முன்னணி நடிகரான உயர்ந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-110.png)
2012-ம் ஆண்டு மெரினா படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர், தொடர்ந்து மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை ரஜினிமுருகன் கனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-111.png)
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டான் படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பிரின்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிவிட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-113.png)
அதனைத் தொடர்ந்து தற்போது மாவீரன் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சிவகார்த்தியேன், அடுத்து எஸ்.கே. 21 படத்திற்கு தயாராகி வருகிறார். இதனிடையே இவரின் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ந் தேதி வெளியாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-114.png)
மண்டேலா என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்தினேயுனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-115.png)
இந்த படத்தின் டிரெய்லர் கடந்த நேற்று (ஜூலை 02) மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-116.png)
இதனிடையே மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/image-117.png)
நேற்று வெளியான மாவீரன் படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போதுவரை 3.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.