New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/amala-paul_latest.jpg)
Mani Ratnam's Ponniyin Selvan: இதில் கரிகால சோழனாக விக்ரமும், வந்தியத் தேவனாக கார்த்தியும், டைட்டில் ரோலில் ஜெயம் ரவியும் நடிக்கிறார்களாம்.
Mani Ratnam's Ponniyin Selvan: ’செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக்க இருக்கிறார்.
இதற்காக நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோரை குதிரை சவாரி மற்றும் வாள் சண்டை ஆகியவற்றை நன்றாக கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளாராம் மணிரத்னம்.
இதில் கரிகால சோழனாக விக்ரமும், வந்தியத் தேவனாக கார்த்தியும், டைட்டில் ரோலில் ஜெயம் ரவியும் நடிக்கிறார்களாம்.
ஏற்கனவே நடிகைகள் ஐஸ்வர்யா ராயும், கீர்த்தி சுரேஷும் ‘பொன்னிய செல்வன்’ படத்திற்கு ஒப்பந்தமாகி விட்டார்கள்.
இந்நிலையில், இதில் வேறு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
அதோடு, ஜியோ ஸ்டூடியோஸ் இதனை தயாரிக்கலாம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
தற்போது இதற்கான செட் அமைப்பதற்காக லொகேஷன் தேடும் வேட்டையில் தீவிரமாக இருக்கிறாராம் மணிரத்னம். அதோடு, விரைவில் படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டு, இவ்வருட இறுதியில் படபிடிப்பை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.