கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வசூலில் சாதனை படைத்துள்ளது.
மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான படம் மஞ்ஜூமேல் பாய்ஸ். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் தமிழக பாக்ஸ் ஆபீஸ் வசூலை மிஞ்சும் வகையில், மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் மாஸ்காட்டி வருகிறது. இந்த படம் ஒரே வாரத்தில் தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.5 கோடி வசூலித்துள்ளது. மேலும் போட்டிக்கு வேறு எந்த தமிழ் படமும் தியேட்டர்களில் இல்லாத்தால், இரண்டாவது வாரமும் படம் நன்றாக வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.
மலையாளப் படத்திற்கு திரையரங்கில் தொடர்ந்து வரவேற்பும், தியேட்டர் ஆக்யூபன்சியும் இருப்பதால், இந்த வாரம் ரூ.15 கோடி வசூல் செய்து, மார்ச் மாதம் இரண்டாவது வார இறுதியில் ரூ.20 கோடியை வசூலிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரஜினியின் 'லால் சலாம்' படத்தின் வசூலை விரைவில் முறியடிக்கும் அளவுக்கு தமிழகத்தில் மஞ்ஜூமேல் பாய்ஸ் வேகம் வலுவாக உள்ளது.
கொடைக்கானலில் உள்ள குணா குகைகளுடன் கதைக்களம் இருப்பதால், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தமிழகத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மேலும் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'குணா' படத்துடன் இணைந்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் 'குணா' இயக்குனர் சந்தான பாரதியையும் 'மஞ்ஜூமேல் பாய்ஸ்' படக்குழு சந்தித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய, 'லால் சலாம்' படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படம் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ரூ.15.35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மலையாள திரையுலகில் 2வது வாரத்தில் 25 கோடிக்கு மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள, மஞ்சும்மேல் பாய்ஸ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்த இப்படம், வெறும் 11 நாட்களில் ரூ.15+ கோடியைத் வசூல் செய்துள்ளது.
இது குறித்து திரைப்படத் துறையின் டிராக்கர் ஏபி ஜார்ஜ், இதைப் பற்றி தனது எக்ஸ் தளத்தில், மஞ்சுமெல்பாய்ஸ் 11 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இருந்து 15+ கோடிகள் என்ற மொத்த வசூலைக் கடந்து பெஞ்ச்மார்க் உருவாக்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“