Tamil Cinema Update : இந்திய சினிமாவில் இசையில் சாதனை படைத்தவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், அப்போதைய முன்னணி நடிகர்கள் தொடங்கி தற்போதைய இளம் நடிகர்கள் வரை அனைவரின் படத்திற்கும் இசையமைத்து இசையுலகின் மாஸ்ரோ என்ற பட்டத்தை பெற்றுள்ளர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா தமிழ் மட்டுமின்றி தெலுங்கி இந்தி மலையாளம் கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கும் தனது இசையால் உயிர்கொடுத்துள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜா குறித்து இதுவரை பலரும் பார்த்திராத அறிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இளையராஜாவுக்கு முன்பே இசையில் பல்வேறு பரிமானங்களை கொடுத்த மூத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் காலில் இளையராஜா விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.
It is a golden time for Raaja sir pay respect to MSV sir 🎸🎸🎷🎷🎶🎼🙏🙏🙏
— V.Vijayan (@vijayan1421979) April 3, 2022
இநத வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும், இளையராஜா என்ற ஜாம்பவான் மற்றொரு ஜாம்பாவானின் காலில் விழுந்து ஆசீவாதம் வாங்குகிறார் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil