தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்த கே.ஏ.தங்கவேலுவுக்கும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், 1952-ம் ஆண்டு பாராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி கணேசனின் 2-வது படமாக பணம் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து துரை என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் அழுத்தமான அப்பா கேரக்டருக்கு என்.எஸ்.கிருஷ்ணன் பரிந்துரைத்த நடிகர் தான் கே.ஏ.தங்கவேலு.
எம்.ஜி.ஆர் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி பிறந்தவர். அதேபோல் அவருக்கு இரண்டு நாட்கள் முன்னதக ஜனவரி 15-ந் தேதி 1917-ம் ஆண்டு பிறந்தவர் தான் கே.ஏ.தங்கவேலு. அதேபோல் நாடக நடிகராக இருந்து எம்.ஜி.ஆர் சதிலீலாவதி படத்தில் தான் திரைத்துறையில் அறிமுகமானார். 1936-ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் தான் கே.ஏ.தங்கவேலுவும் திரைத்துறையில் அறிமுகமானார். சதிலீலாவதி படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க அப்படத்தின் நாயகன் எம்.கே.ராதா தான் சிபாரிசு செய்துள்ளார்.
அதேபோல் கே.ஏ.தங்கவேலு சதிலீலாவதி படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவரும் அப்படத்தின் நாயகன் எம்.கே.தாராதான். இந்த படத்தில் எஸ்.கிருஷ்ணனும் நடித்திருந்தார். சதிலீவாதி படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பட வாய்ப்கு கிடைத்தது போன்று கே.ஏ.தங்கவேலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் நாடகத்திற்கு திரும்பிய அவர் 15 வருட இடைவெளிக்கு பிறகு பணம் படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.
சிவாஜி கணேசன் நடித்த 2-வது படமான பணம் படத்தில் ஒரு அப்பா கேரக்டரில் நடிக்க இவரை தேர்வு செய்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான என்.எஸ்.கிருஷ்ணன், அவருக்கு முன்பணமாக ரூ1000 கொடுத்துள்ளார். இந்த பணத்தை கொண்டுபோன் கே.ஏ.தங்கவேலு தனது பெரியப்பாவிடம் கொடுக்க, அவரோ என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில் தங்கவேலு திருடிவிட்டு வந்துள்ளதாக நினைத்து அவரை அடித்துள்ளார்.
அதன்பிறகு என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லி கே.ஏ.தங்கவேலு தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது குறித்து தனது பெரியப்பாவிடம் விளக்கி கூறியுள்ளார். பணம் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், அடுத்து ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி கல்யாணப்பரிசு திரைப்படம், கல்யாணப்பரிசு தங்கவேலு என்ற புதிய அடையாளத்தை கொடுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“