தமிழ் சினிமாவில் எழுத்தாளர், கவிஞர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் வலம் வந்த கவியரசர் கண்ணதாசன், எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்புடன் இருந்திருந்தாலும், கண்ணதாசன் கடனாளியாக எம்.ஜி.ஆர் தான் முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவை போல் அரசியலிலும் ஆக்டீவாக இருந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் தனது பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துவிடுகிறார். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது சினிமா பைனான்சியர் ஒருவர் நீங்கள் படத்தை தயாரியுங்கள் நான் உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் உற்சாகமான கண்ணதாசன், சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க, அந்த பைனான்சியர் எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்ல, கண்ணதாசனும் எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் கேட்க, நல்ல விஷயம் நான் உங்களுக்கு 3 மாதங்கள் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொல்ல, உற்சாகமான கண்ணதாசன் படத்திற்கான வேலைகளை தொடங்குகிறார்.
மேலும் பல நாட்களாக தனது மனதில் இருந்த ஊமையன் கோட்டை என்ற படத்தின் கதையை எம்.ஜி.ஆருக்காக தயார் செய்து படமாக்க முடிவு செய்து படத்திற்கான பூஜை போடுகிறார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பட பூஜையில், எம்.ஜி.ஆர் இது எனது சொந்த படம் போன்றது. என்னால் முடிந்தவரை சிற்ப்பாக செயல்படுவேன் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, விநியோகஸ்தர்கள் படத்தை கொண்டுவந்து கொட்டியுள்ளனர்.
அந்த காலக்கட்டத்திலேயே சுமார் 50 ஆயிரத்திற்கு மேல் பட பூஜை அன்றே வசூலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி கண்ணதாசன் 3000 அடிக்கு மேல் ஷூட் செய்துள்ளார். ஆனால் எம்ஜி.ஆர் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனால் படப்பிடிப்பு தாமதமான நிலையில், படத்திற்கு நிதியுதவி செய்த பைனான்சியர் கோர்டில் புகார் அளிக்க கண்ணதாசன் உடனடியாக இந்த படத்தை ட்ராப் செய்துள்ளார்.
இந்த விஷயம் எம்.ஜி.ஆர் காதுக்கு செல்ல, அவரே 10 நாட்களில் படப்பிடிப்பை தொடங்குகள் கால்ஷீட் கொடுக்கிறேன் என்று நோட்டீஸ் அனுப்ப, இதற்கு நேரடியாக பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளார் கண்ணதாசன். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த கண்ணதாசன் நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் சினிமாவிலும் நண்பர்களாக இருப்பார்கள் என்று நான் நினைத்தது தவறு என்று கூறியுள்ளார்.
ஊமையன் கோட்டை படம் பாதியில் நின்றதால் மிகுந்த பொருளாதா நெருக்கடியை சந்தித்த கண்ணதாசன் அதன்பிறகு மெல்ல அதில் இருந்து மீண்டு வந்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இருவரும் இணைந்த நிலையில், இருவரும் மாறி மாறி மேடைகளில் புகழ்ந்துகொண்டது, ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக விமர்சித்துக்கொண்டது நடந்தது. அதேபோல் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனபோது கண்ணதாசனை அரசவை கவிஞராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஊமையன் கோட்டை படத்தில் எம்.ஜ.ஆருக்காக தயார் செய்யப்பட்ட அந்த படத்தின் முதல் பாடல் பின்னாளில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த சிவகங்கை சீமை என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.