தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தனது குருவாக ஏற்றுக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் அவருடன் மோதலில் ஈடுபட்டடுள்ளார் எம்.ஜி.ஆர் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி ஆளுமையை வளர்த்தக்கொண்டு இன்றும் பலராலும் கொண்டாப்படக்கூடிய ஒரு தலைவராக இருப்பவர் எம்.ஜி.ஆர். 1918-ம் ஆண்டு பிறந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர், 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தில் தான் எம்.ஜி.ஆர் தனி நாயகனாக நடித்திருந்தார்.
அதன்பிறகு பல படங்களில் நாயகனாக நடித்து முத்திரை பதித்து தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக ஜொலித்த எம்.ஜி.ஆர், தனது குருவாக ஏற்றுக்கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். இருவரும் நெருங்கிய நண்பர்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், இவர்களின் முதல் சந்திப்பு மோதலில் தான் நடந்துள்ளது. சதிலீலாவதி படத்தின்போது எம்.ஜி.ஆர் பல கலைகளை அறிந்திருந்தால், படப்பிடிப்பு தளத்தில் மிடுக்காக அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த படத்தில் காமெடி நடிகராக நடித்த என்.எஸ்.கே, என்ன இப்படி சுத்திட்டு இருக்க, நீ என்ன பைல்வானா என்று கேட்க, ஆமாம் நான் பைல்வான்தான். வரிங்காளா மோதி பார்க்கலாம் என்று, எம்.ஜி.ஆர் கேட்டுள்ளார். இதற்கு என்.எஸ்.கே சரி விடுப்பா என்று சொன்னாலும், பரவாயில்லை வாங்க ஒரு முறை மோதி பார்ப்போம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட என்.எஸ்.கே, நீ ஹீரோ மாதிரி இருக்க, நான் காமெடி நடிகர் நான் விழுந்தால், காமெடியா இருக்கும், ஆனா நீ விழுந்தா அசிங்கமா போய்டும் பரவாயில்லையா என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் பரவாயில்லை நான் ஒருமுறையாவது உங்களை வீழ்த்த வேண்டும் என்று சொல்ல, அதை ஏற்றுக்கொண்ட என்.எஸ்.கே, எம்.ஜி.ஆருடன் மோத தயாரான நிலையில், எம்.ஜி.ஆர் வேட்டியை மடித்துக்கொண்டு தயாராகியுள்ளார். அப்போது என்.எஸ்.கே ஒரு அரை நிஜாருடன் மோதருக்கு தயாராகியுள்ளார். மோதல் தொடங்கியபோது, எம்.ஜி.ஆர் சட்டென்று, என்.எஸ்.கே-வை, கீழே தள்ளிவிட்டார். இதனால் மகிழ்ச்சியில் நின்றபோது, சட்டென்று எழுந்த என்.எஸ்.கே உடனடியாக எம்.ஜி.ஆரை கீழே தள்ளி, மேலே அமர்ந்துகொண்டார். இதனால் எம்.ஜி.ஆர் தோல்வியை சந்தித்தார்.
அடுத்து மோதலில் என்.எஸ்.கே-வை வீழ்த்த வேண்டும் என்று மீண்டும் மோதலுக்கு அழைத்த எம்.ஜி.ஆரிடம், என்.எஸ்.கே விடுப்பா என்று சொல்ல, அந்த இடமே காமெடி தர்பாராக மாறியுள்ளது. அதன்பிறகு எம்.ஜி.ஆர் குளித்துவிட்டு வந்தபோது, தம்பி, சண்டை போடுவது முக்கியமில்லை. நாம் பெரிய பலசாளியாக இருக்கலாம் புத்திசாளியாகவும் இருக்கலாம். ஆனால் எதிரியை சாதாரணமாக நினைக்க கூடாது. பலவீனமாக எதிரி கூட, அசந்த நேரம் பார்த்து உங்களை சாய்த்துவிடுவான். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கூறியுள்ளார்.
என்னதான் சினிமாவில் தனது குருவாக இருந்தாலும், இருவருக்கும் இடையேயான அந்த முதல் சந்திப்பு மோதலில் தொடங்கி பின்னர் பெரிய நட்புக்கு வழி வகுத்தது என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“