சிறுவயதில் தந்தை மற்றும் சகோதரிகளை இழந்த எம்.ஜி.ஆர், தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பெற அவரது அம்மா சத்யபாமாவின் வளர்ப்பு முக்கிய காரணம் என்று சொல்லாம். அதே சமயம் எம்.ஜி.ஆர் சிறுவயதில் இருக்கும்போது அவரது தாய் தன்னை செருப்பால் அடித்தவரை 13 வருடங்கள் கழித்து பழிவாங்கியுள்ளார்.
இந்தியாவில் ஆங்கிலேயே ஆட்சியில், கேரளாவில் நீதிபதியாக பதவியில் இருந்து கோபால் மேனன் என்பவர் மிகவும் நேர்மையான ஒருவராக இருந்துள்ளார். இதனால், அவருக்கு பல சோதனைகள் வர, ஒரு கட்டத்தில் இந்த வேலையே வேண்டாம் என்று விட்டுவிட்டு, கல்லூரி பேராசிரியராக இலங்கையில் வேலைக்கு சேர்க்கிறார். இலங்கையில் சில ஆண்டுகள் அவர் வேலை செய்து வந்தபோது, 1917-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பிறக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயது ஆகும்போது, தந்தை கோபால் மேனன் இறந்து போகிறார். எம்.ஜி.ஆருக்கு முன்பு இந்த குடும்பத்தில் 4 பிள்ளைகள் இருந்த நிலையில், எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 5 பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சத்யபாமா அம்மையாருக்கு வருகிறது. இதனால் தனது தாய் இல்லமான வடவூருக்கு பிள்ளைகளுடன் வந்துவிடுகிறார். தந்தை கோபால் மேனன் இறந்த சோகத்தில், எம்.ஜி.ஆரின் மூத்த அண்ணன், இரண்டு அக்கா என 3 பேரும் மரணமடைந்து விடுகின்றனர்.
கணவர் வீட்டு சொத்துக்கள் இல்லாமல், தாய் வீட்டின் அரவணைப்பும் இல்லாமல், சத்தியபாமா மகன்கள் சக்ரபாணி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருடனும் கடுமையாக வறுமையில் போராடிக்கொண்டிருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரின் அப்பா கோபால் மேனன் மூலமாக பல உதவிகளை பெற்ற காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற வேலு நாயர் என்பவர் எம்.ஜி.ஆர் குடும்பத்திற்கு உதவி செய்ய வருகிறார். இவர் கும்ப்கோணத்தில் நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.
கும்பகோணத்தில் இருப்பதால், எம்.ஜி.ஆர் அம்மாவிடம் பேசி, அக்கா நீங்கள் கும்பகோணம் வந்துவிடுங்கள் என்று அழைத்து சென்றுவிடுகிறார். அங்கு குடும்ப வறுமை காரணமாக எம்.ஜி.ஆர் மற்றும் சக்ரபாணி ஆகிய இருவரையும் நாடகத்தில் நடிக்க வைக்க அழைத்துச்செல்கிறார். இப்படியே வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் வேலு நாயரின் தங்கைக்கும் – எம்.ஜி.ஆர் அம்மா சத்யபாமாவுக்கும் பிரச்சனை ஏற்பட, அவர் வேலு நாயரிடம் சென்று, சத்யபாமா நம் குடும்பத்தை பற்றி தவறாக சொல்லிவிடுகிறார்.
இதை கேட்டு கோபமான வேலு நாயர் குடித்துவிட்டு சத்யபாமா வீட்டுக்கு சென்று 4 வயதான எம்.ஜி.ஆர் 7 வயதானா சக்ரபாணி ஆகிய இருவரையும் வெளியில் தள்ளிவிட்டு, சத்யபாமாவை வீட்டுக்குள் வைத்து செருப்பால் அடித்துவிடுகிறார். இதை பார்த்த எம்.ஜி.ஆர் சக்ரபாணி இருவரும் அழுதுபுலம்புகின்றனர். அதன்பிறகு மகன்களை தேற்றி பள்ளிக்கு அனுப்பி வைக்கும் சத்யபாமா இந்த சம்பவத்தை மனதிற்குள் வைத்திருந்துள்ளார்.
அதன்பிறகு ஆண்டுகள் கடந்த நிலையில், 16 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் குடித்துவிட்டு சத்யபாமா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது 20 வயதான எம்.ஜி.ஆர், நாடகத்திற்காக வாள் சண்டை எல்லாம் பயின்று திடகாத்ரமான ஆளாக இருக்கிறார். அப்போது வீட்டுக்கு வந்த வேலு நாயரை எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா முன்பு நடந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை செருப்பால் அடித்துள்ளார். அன்று நீ என்னை அடித்ததற்கு இன்று நான் பழிவாங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
அந்த நேரம் பார்த்து எம்.ஜி.ஆரும் அங்கு வந்துவிட, வேலு நாயர் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அன்று அவர் என்னை அடித்தற்கு நான் திருப்பி அடித்துவிட்டேன். அந்த சாபம் வந்தால் அது என்னோடு போகட்டும், நான் அடித்துவிட்டேன் என்னை எதுவும் செய்ய முடிவில்லை என்பதால் அவர் தன்னை தானே எதுவும் செய்துகொள்ளபோகிறார். அவர் நமக்கு பெரிய உதவிகள் செய்தவர் அவரை பத்திரமாக பார்த்துக்கொள் என்ற எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளார் சத்யபாமா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.