தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து அதில் வெற்றியும் கண்டவர் தான் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக சிறுவயதில் அறிமுகமாகி, பின்னர் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர், பல போராட்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல போராட்டங்களையும் சந்தித்துள்ளார்.
பல தடைகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் தனது படங்களில் தயாரிப்பாளகளை கடந்து அனைத்து முடிவுகளையும் தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார். அப்போது தான் சினிமா படப்பிடிப்பில் வேலை செய்யும் அடிப்பட்ட ஊழியர்கள் முதல் அனைவருக்கும், சமமான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்தியும் காட்டியவர் தான் எம்.ஜி.ஆர்.
ஒருமுறை தனது படத்தின் படப்பிடிப்பில் மதிய உணவில் 170 பேர் சாப்பிட வேண்டும். ஆனால் முதலில் 120 பேர் அமந்துள்ளனர். அவர்களுடன் நடுவில் அமர்ந்து எம்.ஜி.ஆர் சாப்பிட தயாராகியுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் தட்டில் என்னென்ன உணவுகள் வைக்கப்பட்டடோ அதே உணவுகள் அனைவரின் தட்டிலும் இருக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் சொன்னதை நினைவில் வைத்து சாப்பாடு பரிமாறும் அனைவரும் வேலை பார்த்துள்ளனர்.
அப்போது இப்போது இருக்கும் 120 பேருக்கு தான் சாப்பாடு இருக்கிறது. அடுத்து வரும் 50 பேருக்கு சாப்பாடு இல்லை. இவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்பாக சாப்பாடு வரவழைத்து அவர்களுக்கும் சாப்பாடு கொடுத்துவிடலாம் என்று எம்.ஜி,ஆரிடம் கூறியுள்ளனர். இதை கேட்ட எம்.ஜி.ஆர் உடனடியாக பந்தியில் இருந்து எழுந்து, நான் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு எழுந்துள்ளார். இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவர் எம.ஜி.ஆரிடம் கேட்டபோது, இப்போது உங்களுடன் அமர்ந்து நான் சாப்பிட்டுவிட்டால், அடுத்து வரும் 50 பேருக்கு நீங்கள் சாப்பிடுவது போன்ற சாப்பாடு கிடைக்காது. நான் சாப்பிடவில்லை என்பதால், கலவை சாதமோ அல்லது வேறு எதும் சாப்பாடோ கொடுத்துவிடுவார்கள். நான் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டால் இப்போது பந்தியில் என்னென்ன வைத்தார்களே அதே சாப்பாடு அவர்களுக்கும் கிடைக்கும். அதனால் தான் நான் பந்தியில் இருந்து எழுந்தேன் என்று கூறியுள்ளர். அதன்பிறகு அந்த 50 பேருக்கும் சமமான உணவு பரிமாற அவர்களுடன் அமர்ந்து எம்.ஜி.ஆர் சாப்பிட்டுள்ளார். இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“