/indian-express-tamil/media/media_files/IBkB2F0nMagVLSsPmPUb.jpg)
எம்.ஜி.ஆர்
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்னம் மக்கள் மனதில் இடமபிடித்துள்ள நடிகர் எம்.ஜி.ஆர் சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடியபோது தனது பாடல்கள் மூலம் ஒரு கவிஞர், எம்.ஜி.ஆரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
நாடக நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். எம்.கே.ராதா நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் எம்.ஜி.ஆர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், எம்.ஜி.ஆருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்துள்ளது. ஆனாலும் அனைத்தும் போலீ்ஸ் கேரக்டராக அமைந்தால் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.
அதே சமயம் வித்தியாசமான கேரக்டர்களில் ஒரு சில படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் 10 வருடங்களா ஹீரோவாக நடிக்க போராடி வந்துள்ளார் ஒரு வழியாக ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததது. 1947-ல் வெளியான இநத படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆருக்கு 1950-களை கடந்தபோது சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே சமயம் 1952-ல் வெளியான பராசக்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவாஜி கணேசன் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார்.
அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி காத்துக்கொண்டிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் தான் எந்த இடத்தில் தவறு செய்தோம், தமக்கு ஏன் பட வாய்ப்பு அதிகரிக்கவில்லை, மக்களுக்கு எதில் நாட்டம் அதிகம் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் மக்களின் மனநிலையை அறிய அரசியல் கூட்டங்களில் பங்கேற்க தொடங்குகிறார். இவரின் முகம் மக்கள் மத்தியில் அதிகம் பரிட்சயமாகிறது. அதன்பிறகு மலைக்கள்ளன் என்ற படத்தில் நடிக்க அந்த படம் வெளியாகிறது.
நாமக்கல் கவிஞர் கதை எழுத, ஸ்ரீராமலு நாயுடு இயக்கி தயாரித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணாக அமைந்தது ஒரு பாடல். ‘’எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’’ என்ற இந்த பாடல் சமூகத்திற்கு ஏற்ற கருத்துள்ள பாடலாக அமைந்து எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. அதன்பிறகு தனது படங்கள் அனைத்திலும் ஒன்று அல்லது 2 பாடல்கள் இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் முடிவு செய்துள்ளர்.
இந்த மாதிரி கருத்துள்ள பாடல்களை யாரை வைத்து எழுதுவது, தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி ஆகியோர் தலைமுறை தாண்டிவிட்டார்கள் இந்த தலைமுறை கவிஞர் யாராவது இருப்பார்களா என்று எம்.ஜி.ஆர் தேடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் என்டரி ஆனவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். வார்த்தைகள், மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் முன்னணி கவிஞராக மாறிய பட்டுக்கோட்டை எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அப்போது எம்.ஜி.ஆர் எனக்காக ஒரு பாடல் எழுந்துங்க, அதை பார்த்துவிட்டு நான் சொல்கிறேன் என்று சொல்ல, அங்கேயே தாளம் தட்டி ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் தான் ‘’சும்மா கிடந்த நிலைத்தை சுற்றி’’ என்ற பாடல். இந்த பாடலை பட்டுக்கோட்டை விளையாட்டாக பாட, இதை எனக்கு கொடுங்கள் நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். நீங்கள் சொன்னதால் நான் வாய்க்கு வந்ததை பாடினேன் என்று பட்டுக்கோட்டை சொன்னாலும், அவரிடம் இருந்து எம்.ஜி.ஆர் அந்த பாடலை வாங்கிக்கொள்கிறார்.
தான் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் இந்த பாடலை வைக்க சரியான சூழ்நிலை இல்லை என்றாலும், சூழ்நிலையை உருவாக்கி இந்த பாடலை வைத்துள்ளார். அதோடு மட்டுல்லாமல், இதே படத்தில் ‘’தூங்காதே தம்பி தூங்காதே’’ என்ற இன்னொரு பாடலையும் எழுதியுள்ளார் பட்டுக்கோட்டை. அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களுக்கு பட்டுக்கோட்டை பாடல் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர் வரவேற்பை பெற்ற பட்டுக்கோட்டை பாடல்கள் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us