பஞ்சாப்பில் பிறந்தாலும் தென்னிந்திய மொழிகளில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நிலைத்து நிற்கும் நடிகை ராதா சலூஜா குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1950-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் ராதா சலூஜா. பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தில் இவர் மூத்த மகள்.இவருக்கு அடுத்து ரேனு சலூஜா மற்றும் கும்கும் கதாலியா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். டெல்லியில் பிறந்திருந்தாலும் ராதா சலூஜா தனது பள்ளிப்படிப்பை மும்பையில் முடித்துள்ளார்.
சிறுவயது முதலே கலையில் ஆர்வம் கொண்ட ராதா சலூஜா, தனது பள்ளிப்படிப்புடன் பாரம்பரிய கலை, மற்றும் சங்கீதத்தையும் முறையாக பயின்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்டுத்தி பல பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
இவரது சகோதரி ரேனு சலூஜா பல தேசிய விருதுகளை வென்ற ஃபிலிம் எட்டிட்டர். ஆவார் அதேபோல் மற்றொறு சகோதரி கும்கும் கத்தாலியா மருத்துவராவார். தனது தங்கை போலவே புனேயில் உள்ள திரைப்பட கல்லூரியில் தொழில்நுட்பம் குறிதத படிப்பினை தேர்வு செய்த ராதா சலூஜா அங்கே நடிப்பு பயிற்சியும் எடுத்துக்கொண்டுள்ளார்.
நாட்டியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராதா சலூஜா 1969-ம் ஆண்டு இந்தியில் வெளியான சிம்லா ரோடு என்ற படத்தில் நீனா என்ற கேரக்டரில் நடித்து தனது கலையுலக பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து படிப்பிற்காக நடிப்பை விட்ட ராதா சலூஜா 1971-ம் ஆண்டு அணில் தவான் நடிப்பில் வெளியான தோ ரஹா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
மாறுப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் ராதா சலூஜாவுக்கு பல பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து ராதா சலூஜாவுக்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதில் தோ ரஹா என்ற படம் 1972-ல் இந்த படம் தமிழில் அவள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து லக்கோன் ஏரிமேக், சோரி சோரி உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்த ராதா சலூஜா இந்தி திரையுலகின் அப்போதைய முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் ஒவ்வொரு படத்திற்கும் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தொடர்ந்து 1973-ம் ஆண்டு வெளியான மான் ஜீத்தே ஜக்ஜீத் என்ற திரைப்படத்தின் மூலம் தனது தாய் மொழியான பஞ்சாயில் அறிமுகமானார்,
வட இந்தியாவில் இந்திய பஞ்சாபி மற்றும் வங்க மொழிகளில் நடித்த ராதா சலூஜாலுக்கு தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியது. இதில் 1975-ம் ஆண்டு சத்யா மூவிஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான இதயக்கனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது.
இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ராதா சலூஜா அதன்பிறகு இந்தி பக்கம் சென்றார். அதன்பிறகு 1977-ம் ஆண்டு வெளியான இன்றுபோல் என்றும் வாழ்க என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்த ராதா சலூஜா மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த ராதா சலூஜா தனது நடிப்பு மற்றும் நடன திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள ராதா சலூஜா, தமிழில் நெஞ்சில் ஆடும் பூ ஒன்று, நீலக்கடலின் ஓரத்திலே என 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மலையளத்தில் பிரேம் நசீர், தெலுங்கில் என்.டி.ஆர், கன்னடத்தில் ஆனந்த் நாக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் ராஜதா சலூஜா.
கன்னடத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான மதுர சங்கமா என்ற படத்தில் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்தார். இதுவே அவர் கன்னடத்தில் நடித்த ஒரே படமாகும். அதேபோல் மலையாளத்தில் அனுகிரகம் என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தெலுங்கில் டைகர் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கன்னடா தெலுங்கு படங்கள் 1979-ம் ஆண்டு வெளியான நிலையில் மலையாளப்படம் 1977-ம் ஆண்டு வெளியானது.
இவ்வளவு பெருமைக்கு சொந்தக்கரரான இவர், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலில் வாணொலியில் பணியாற்றிய சமீம் சைத்தி என்பவரை 1983-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் திரைத்துறையில் இருந்து விலகிய அவர், தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
சிறுவயதில் இருந்தே சங்கீதம் தெரிந்த ராதா சலூஜா அமெரிக்காவில் உள்ள இசைக்குழுவுடன் இணைந்து பொழுபோக்கிற்காக பாடல் பாடி வந்துள்ளார். தொடர்ந்து அங்யே மேற்படிப்பை தொடர்ந்து ராதா சலூஜா அமெரிக்க நீதிமன்றத்தில் ஆசிய மொழிகளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்பாளராக பணியாற்றியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.