சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஆர்.எஸ்.மனோகர் நாடக குழுவும் நடத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த நாடக குழுவை நடந்த முடியாத சூழலில், அவர் கொடுத்த ஒரு அறிக்கை எம்.ஜி.ஆரை நிலைகுலைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த, எம்.கே.தியாகராஜபாகவர், பியூ சின்னப்பா, எம்.கே.ராதா, எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலரும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள் தான். இவர்கள் அனைவருமே திரைத்துறையில் பிஸியாக நடித்து வந்தாலும், நாடக குழுவும் நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் தொடர்ந்து நாடக குழுக்கள் இயங்கி வந்துள்ளது.
இந்த பட்டியலில் முக்கிய நடிகராக திகழ்ந்தவர் தான் ஆர்.எஸ்.மனோகர். நடிப்பில் மீதுள்ள ஆர்வத்தினால், அரசு வேலையை உதறிவிட்டு சினிமாவில் அடியெடுத்து வைத்த அவர், சொந்தமாக நாடக குழுவும் நடத்தி வந்துள்ளார். 100-க்கு மேற்பட்ட நாடகங்களை நடத்திய அவர், சினிமாவில் பிஸியாக நடித்து வந்த காலக்கட்டத்திலும் நாடகங்களிலும் நடித்து வந்தார். இவரது நாடகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆர்,எஸ்.மனோகரின் நாடக குழு நலிவடைய தொடங்கியதால், அதில் இருந்த நடிகர்கள் பலரும் அந்த குழுவில் இருந்து வெளியெற தொடங்கிவிட்டனர். இதை பார்த்து மனம் பொறுத்துக்கொள்ள முடியாத ஆர்.எஸ்.மனோகர், தனது நாடக குழுவில் இருந்த அனைத்து பொருட்களையும் எரித்துவிட்டு, இனி நான் நாடகத்தில் நடிக்க போவதில்லை. நாடக நடிப்பில் இருந்து முற்றிலும் விலக போகிறேன் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இவரது அறிக்கையை பார்த்த எம்.ஜி.ஆர், உடனடியாக ஆர்.எஸ்.மனோகரை அழைத்து, உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று சொல்லுங்கள் நானே செய்கிறேன். அதை விட்டுவிட்டு இப்படி அறிக்கைவிட்டால் சரியாக இருக்குமா? என்று கேட்டுவிட்டு, அவருக்கு முழு ஆதரவை கொடுத்து அவரது நாடக குழு மீண்டும் முழுவீச்சில் இயங்குவதற்கு உதவி செய்துள்ளார். அதன்பிறகு ஆா.எஸ்.மனோகர் 11 நாடகங்களை நடத்தியுள்ளார்.
அதன்பிறகு நாடகங்கள் நடத்திய ஆர்.எஸ்.மனோகருக்கு நாடக காவலன் என்ற பட்டத்தை வழங்கிய எம்.ஜி.ஆர், தொடர்ந்து அவரது நாடகங்களுக்கு தனது உதவிகளை செய்து வந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“