Advertisment
Presenting Partner
Desktop GIF

அரசியல் எதிர்ப்புகள், தோல்வி படம் என விமர்சனம்: உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் செய்த சிறப்பான சம்பவம்

உலகம் சுற்றும் வாலிபன் தோல்வியை சந்திக்கும் என்று எழுதிய பத்திரிக்கையாளரே படத்தை பாராட்டும் வகையில் எம்.ஜி.ஆர் ஒரு சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
MGR Ladha

உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், இந்த படம் தோல்வியை சந்திக்கும் என்று பத்திரிக்கையில் எழுதிய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு படத்தின் முதல் காட்சியை எம்.ஜி.ஆர் திரையிட்டு காட்டியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர், என பன்முக திறமை கொண்ட எம்.ஜி.ஆர், வாள் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளிலும் முறையாக பயிற்சி பெற்றவதாக இருந்துள்ளார். நாடக நடிகராக இருந்து திரையுலகில் துணை நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பிறகு, நாயகனாக உயர்ந்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான நாடோடி மன்னன் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்த எம்.ஜி.ஆர், 1970-களில் அதிமுக கட்சியை தொடங்கினார். அப்போது உலகம் முழுவதும் சிறந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதற்கு ஏற்றார்போல் ஒரு கதை தேவை என்று தேடிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் கதை கிடைத்துள்ளது, இந்த படத்தை படமாக்க, பல தடைகள் வந்துள்ளது. ஆனாலும் மனம் தளராத எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு நடத்த வெளிநாடுகளுக்கு செல்ல தயாரானார்.

அரசியல் தடைகள் காரணமாக தன்னை யாரும் விமான நிலையத்தில் சந்திக்க வேண்டாம். வீட்டிலேயே சந்தித்து விடுங்கள் என்று கூறிய எம்.ஜி.ஆர், அனைவரையும் சந்தித்துவிட்டு, அண்ணாவின் நினைவிடத்தில் வணங்கிவிட்டு, புறப்பட்டுள்ளதார். இந்தபடத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர் எம்.ஜி.வல்லபன் என்பவர் (கேரளாவை சேர்ந்தவர்) தனது பத்திரிக்கைகளில், உலகம் சுற்றும் வாலிபன் படம் தோல்வியை சந்திக்கும் என்று எழுதியிருந்தார்.

மேலும், உலகம் முழுவதும் படமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த படம் எழுக்கப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களை கவரும் வகையில் ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை என்று எழுதியிருந்தார். இந்த செய்தியை படித்த எம்.ஜி.ஆர் இவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்று உறுதி செய்து அப்படியே படமாக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரானபோது, சிறப்பு காட்சிக்காக பத்திரிக்கையாளர்களை அழைத்துள்ளனர்.

அந்த வகையில் எம்.ஜி.வல்லப்பனை அழைக்க எம்.ஜி.ஆர் கார் சென்றுள்ளது. படத்தை பார்த் எம்.ஜி.வல்லப்பன், படம் மிகவும் அருஐமயாக இருக்கிறது. இதில் எது செட் எது ஒரிஜினல் இடம் என்பது தெரியாமல் சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள். நான் அவ்வாறு எழுதியது தவறுதான் என்று தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு இந்த படத்தை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவு தான் என்று எம்.ஜி.ஆர் அவரை வாழ்த்தி அனுப்பியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment