எம்.ஜி.ஆர் வாலி இடையே நெருங்கிய நட்பு இருந்தாலும், திராவிட கொள்ளைகளை கடைபிடிக்குமாறு எம்.ஜி.ஆர் சொல்ல, வாலி உடனடியாக அதை மறுத்துள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது?
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரரான வாலி,ஜெமினி சாவித்ரி நடிப்பில் வெளியான கற்பகம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார். இந்த படததிற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் மற்றம் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுத தொடங்கியள்ளார்.
வாலியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கற்பகம் படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த எம்.எஸ்.வி, அதன்பிறகு பல படங்களில் தனது இசையில அவரை பாடல் எழுத வைத்துள்ளார். ஒரு கடத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் ஏற்பட, அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்ற வாலி, பல ஹிட் பாடல்களை எம்.ஜி.ஆருக்காக எழுதியுள்ளார்.
அந்த வகையில் உருவான உரு படம் தான் எங்க வீட்டு பிள்ளை. 1965-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்கில் நடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். இதில் மாந்தோப்பில் நின்றிருந்தேன் பாடல் பதிவின்போது, வாலியை தனியாக அழைத்த எம்.ஜி,ஆர், நீங்கள் வியூதி குங்குமம் வைத்துக்கொண்டு வருவது அரசியல் தோழர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், திராவிட சிந்தனை கொண்ட பலர் பாடல் எழுத இருக்கும்போது வாலியை ஏன் அழைத்துள்ளீர்கள் என்று கேட்கிறார்கள். அதனால் நீங்கள் இங்கு வரும்போது மட்டும் வியூதி குங்குமம் வைக்காமல் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலி, அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க, நீங்கள் என்மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் இதை எடுத்தால் தான் பாட்டு என்றால் அது ஒத்துவராது அண்ணே. நாம நண்பர்களாகவே இருப்போம் என்று கூறியுள்ளார்.
வாலியின் இந்த பேச்சை கேட்டவுடன், எம்.ஜி.ஆர் தன்னை மறந்து கட்டிபிடித்துள்ளார். இந்த தகவலை கவிறுர் வாலி, வசந்த் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“