மூக்குத்தி அம்மன் 2-ம் பாகம்: மீண்டும் அம்மன் வேடத்தில் நயன்தாரா; ஆர்.ஜே.பாலாஜி இருக்கிறாரா?
மூக்குத்தி அம்மன் படத்தின் 2-ம் பாகம் தயாராக உள்ள நிலையில், இதில் அம்மனாக மீண்டும் நயன்தாராவே நடிக்கும் நிலையில், தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் படத்தை தயாரிக்கிறார் நயன்தாரா
மூக்குத்தி அம்மன் படத்தின் 2-ம் பாகம் தயாராக உள்ள நிலையில், இதில் அம்மனாக மீண்டும் நயன்தாராவே நடிக்கும் நிலையில், தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் படத்தை தயாரிக்கிறார் நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் 2-ம் பாகம் தாயாராக உள்ளதாக வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகம் எடுக்கும் படலம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெளியான சந்திரமுகி 2, சண்டக்கோழி 2, சாமி 2 உள்ளிட்ட பல படங்கள் வெற்றியை தொட தவறிவிட்டாலும் இந்த இரண்டாம் பாக மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துள்ளது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம்.
நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் மூக்குத்தி அம்மன். நயன்தாரா அம்மனாக நடித்திருந்த இந்த படத்தில் ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கடவுள் என்ற பெரில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை சரியான கோணத்தில் காட்சிப்படுத்தியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
மேலும் எல்.கே.ஜி. படத்திற்கு பிறகு ஆர்.பாலாஜிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது மூக்குத்தி அம்மன் படம். இந்த படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி நடித்த வீட்ல விஷேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்கள் பெரியதாக வெற்றியை பெறாத நிலையில், மீண்டும் மூக்குத்தி அம்மன் படத்தை ஆர்.ஜே.பாலாஜி கையில் எடுத்துள்ளதாகவும், இந்த படத்தின் 2-ம் பாகமாக இயக்கும் படத்தில் த்ரிஷா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
Advertisment
Advertisements
இதனிடையே மூக்குத்தி அம்மன் 2 படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், மீண்டும் நயன்தாராவே இந்த படத்தில் அம்மனாக நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்தது மட்டுமல்லாமல், இணை இயக்குனராகவும் படத்தை இயக்கியிருந்த ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் தற்போது வெளியாகியுள்ள படத்தின் ப்ரமோவில் இடம்பெறவில்லை. இதன் மூலம் படத்தின் இயக்குனர் மற்ற நடிகர்கள் விபரம் குறித்து தகவல்கள் இல்லை.
மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா சமீபத்தில் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும், தற்போது அவர், டெஸ்ட், மண்ணாங்கட்டி, மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மூக்குத்தி அம்மன் படத்தை வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தனது ரவுடி பிச்சர்ஸ் மூலம் நயன்தாரா தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“