1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பசும்பொன் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த இவர், இப்போது தமிழ் சினிமாவில், முக்கிய அம்மா நடிகையாக வலம் வருகிறார். அஜித்குமார் தொடங்கி தனுஷ் வரை பல நடிகைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா.
Advertisment
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சரண்யா, தற்போது ஜெயம்ரவி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ப்ரதர் படத்தில் நடித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு நடிகர் இயக்குனர், ஓவியர் என பன்முக திறமை கொண்ட பொண்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யாவுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். திரைப்படங்களில் பலருக்கும் அம்மாவாக நடித்த சரண்யா ரியல் லைஃபில், ஒரு கண்டிப்பான அம்மாவாக இருக்கிறார்.
பொன்வண்ணன் - சரண்யா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருமே மருத்துவம் படித்துள்ள நிலையில், மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளளையமகள் பொதுநல மருத்துவராகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் கலாட்டா பின்க் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தங்களது பெற்றோர் குறித்து பேசியுள்ளனர். வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ரிக்ட். ஆனால் அப்பா அப்படி இல்லை. நாங்கள் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு தான்.
நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அப்படி இருக்க கூடாது என்று அப்பா அம்மா இருவருமே சொன்னது இல்லை. நாங்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்ற எங்களுடன் இருந்தார்கள். ஆனால் படிப்பு என்று வரும்போது மார்க் அதிகம் இல்லை என்றால் திட்டு விழும். வீடு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று அம்மா விரும்புவார். அதனால் சாப்பிட்டுவிட்டு தட்டை கழுவில்லை என்றால் கூட திட்டு விழும். அம்மா ஷூட்டிங் போனலும் சரி அங்கிருந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.
Advertisment
Advertisements
அதேபோல் எங்கள் அப்பா நாங்கள் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக, அவர் காலை 4 மணி 2 மணி என அதிகாலையில் எழுந்து எங்களை எழுப்பி விடுவார். ஆனால் அப்பாவை விட அம்மாதான் ரொம்ப ஸ்ரிக்ட். ஆனால் எங்களுக்கு துணி தைத்து கொடுப்பது எங்கள் அம்மா தான். பிறந்த நாள் என்று வந்துவிட்டால், மெட்டீரியல் எடுத்து வந்து அவரே தைத்து கொடுத்துவிடுவார். முன்பு எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆடையை தான் தைத்து கொடுத்தார். இப்போ மாற்றிவிட்டார் என்று இரு மகள்களுமே கூறியுள்ளனர்.
அதேபோல், நான் ஸ்ரிக்ட் இல்லை. என் மனைவி தான் ஸ்ரிக்ட். நாங்கள் இருவரும் திரைத்துறையில் இருந்தாலும், அவர்கள் எங்களை போல் வராமல் அவர்களுக்கென தனி துறையை தேர்வு செய்துகொண்டார்கள். அதேபோல் அவர்கள் படிக்க நான் அதிகாலை எழுந்திரிக்க வேண்டும். அந்த பொறுப்பை என்னிடம் கொடுப்பார்கள் என்று பொன்வண்ணன் கூறியுள்ளார். நடிகை சரண்யா கூறும்போது, நான் ஸ்ரிக்ட் தான். அவர்கள் என்ன சாப்பாடு கொண்டுபோகிறார்கள் என்பதை கூட நான் சரியாக கவனிப்பேன். ஒழுக்கம் வேண்டும் என்பதற்காக நான் கண்டிப்பாகத்தன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“