40 வயதில் குழந்தை பெற ஆசைப்படும் பெண் கதை: நடிகையாக ஜெயித்த வனிதா... இயக்குனராக எப்படி?

வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Mrs and Mr Movie Review Vanitha Vijaykumar Jovika Robert Master Tamil News

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் முதல்முயைாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம். வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர்,ஷகிலா, செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

Advertisment

நேற்று (ஜூலை 11) வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதா என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஷகிலாவின் மகளான வனிதாவை ராபர்ட் திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் குழந்தை வேண்டாம் என்று இருவரும் முடிவு செய்து வாழ்ந்து வந்தாலும், வனிதாவின் தோழிகள் வாழ்க்கைக்கு குழந்தைகள் தான் முக்கிய என்று ஏற்றிவிட, வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறார். ஆனால் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார்.

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வனிதாவின் விருப்பமே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இருவரும் பிரிந்துவிட, மீண்டும் இணைந்தார்களா? குழந்தை பிறந்ததா? அடுத்து என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் மீதி கதை. 40 வயதுக்கு மேல் ஆன ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் தாம்பத்தியத்திற்காக தனது கணவனை எப்படி அனுகுவாள் என்பதை வித்தியாசமாக சொல்கிறேன் என்ற பெயரில், படம் முழுக்க, வயது வந்தோருக்கான காட்சியை வைத்து நிரப்பி இருக்கிறார் வனிதா.

படத்தின் முதல் பாதி முழுவதும் டபுள் மீனிங் டைலாக், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் தான் அதிகம். குறிப்பாக ஒரு கட்டத்தில் கணவரனின் விந்தணுவை சேமிக்கும் முயற்சியில் வனிதா ஈடுபடுவது, அடல்ட் படத்திற்கு உண்டான உணர்வைத்தான் கொடுக்கிறது. ஆனாலும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண்ணின், கேரக்டரை சரியாக பிரதிபலித்திருக்கிறார். ஷகிலா, பாத்திமா பாபு, கிரண், ஆர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர். ராபர்ட் மாஸ்டர் கதைக்கு ஏற்ப தனது கேரக்டரை சரியாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

Advertisment
Advertisements

இசையில், மைகேல் மதன காம ராஜன் பட பாடலான சிவராத்திரி தூக்கம் ஏது பாடலை பயன்படுத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. படம் முழுக்க, டபுள் மீனிங், அடல்ட் காட்சிகள் என படம் வயது வந்தோருக்கான படமாக மாறிவிட்டது. இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் என்று சொல்லலாம்.

Vanitha Vijayakumar Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: