இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், தோனி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பினரையும் இந்த அறிவிப்பு கவர்ந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாக கேப்டன்களில் முக்கியமானவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசி நடத்தும் 3-வகையாக கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள தோனி கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
அதே சமயம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனி அடுத்த சீசனில் களமிறங்க கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். தோனி பிறந்தது ஜார்க்கண்ட் மாநிலம் என்றாலும் அவர் தமிழ்நாட்டை தனது 2-வது வீடாக நினைப்பதாக பலமுறை தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் தோனிக்கு பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.
We're super excited to share, Dhoni Entertainment's first production titled #LGM – #LetsGetMarried!
— Dhoni Entertainment Pvt Ltd (@DhoniLtd) January 27, 2023
Title look motion poster out now! @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @HasijaVikas @Ramesharchi @o_viswajith @PradeepERagav pic.twitter.com/uG43T0dIfl
இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்க உள்ளதாகவும், முதலில் தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தோனி தயாரிப்பும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Congratulations @msdhoni Here's wishing you guys a Longgg Super Success streak !! ✨
— 𝐒𝐢𝐯𝐚 || 𝕍𝕂 ⓄⓃⒺ8 ᵀʰᵃᵍᵍᵉᵈʰᵉ ˡᵉ🫳 (@loveda_69) January 27, 2023
Thala cameo irukkuma 😍🔥🔥
— Thalapathy Krish ✨️❤️👑 (@JD_is_Boss) January 27, 2023
Wow Ivana good choice. Looking forward 🤩 Gud luck 2 team🤙
— мιяα ☘ (@Yavdimira) January 27, 2023
Boom 💥 The Much anticipated our @iamharishkalyan 's Next flick under our dearest @msdhoni 's production #DhoniEntertainmentProd1 titled : #LGM Let’s get married 💞
— 𝐓𝐞𝐚𝐦 𝐇𝐚𝐫𝐢𝐬𝐡 𝐤𝐚𝐥𝐲𝐚𝐧™ (@HarishKalyanTM) January 27, 2023
Really looking forward, the expectations and excitement is getting higher and higher every single day🔥 pic.twitter.com/EB0uK2zxhW
இந்நிலையில் தோனி தயாரிக்கும் முதல் படத்தின் பெயர் எல்.ஜி.எம் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குறார். நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ்டூடே நாயகி இவானா,யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர்.
இந்த அறிவிப்பு தொடர்பான ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.