இசை உலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.வி இசையமைத்து வெளியான பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவர் இசையமைத்த பாடல் அவர் நண்பரின் உயிரையே காப்பாற்றியுள்ளது என்று எம்.எஸ்.வியே கூறியுள்ளார்.
க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஆரம்பத்தில் பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் இசையமைப்பாளராக மாறிய இவர், தொடக்கத்தில் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்ததார். ஒரு கட்டத்தத்தில் இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில், அடுத்து படங்களுக்கு எம்.எஸ்.வி தனியாக இசையமைக்க தொடங்கினார்.
கவிஞர் வாலிக்கு வாழ்வு கொடுத்த எம்.எஸ்.வி, கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பற்றதோடு மட்டுமல்லாமல், இன்றும் பலரும் ரசிக்கக்கூடிய பாடல்களாக அமைந்துள்ளது. அந்த வகையில் அமைந்த ஒரு பாடல் தான் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற பாடல்.
இந்த பாடல் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள எம்.எஸ்.வி, இந்தியில் இதே போன்று ஒரு பாடல் வெளியானது. அது எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. அதன்படி இந்த பாடலை உருவாக்கினோம். இசை அனைத்தையும் ஆடவைக்கும். அந்த மாதிரி ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்துள்ளது. எனது நெருங்கிய நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி சீரியசான நிலைமைக்கு சென்றுவிட்டார்.
அப்போது டாக்டர்கள் எல்லோரும் சிகிச்சை அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் முன்னேற்றம் இல்லை. அவருக்கு பிடித்ததை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டனர். அவருக்கு பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அப்போது என் பாடல்கள் அனைத்தையும் அவர் கேட்கும் வகையில் ப்ளே செய்துள்ளனர். 2 நாட்கள் இடைவிடாமல் இந்த பாடல்கள் ஓடிக்கொண்டே இருந்தது. 3-வது நாள் கண்விழித்த அவர் ‘’சட்டி சுட்டதடா’’ பாட்டு வரவே இல்லையே என்று கேட்டுள்ளார்.
அறந்த அளவிற்கு இசை அனைத்தையும் ஆட வைக்கும். அதற்கு உதாரணமாகத்தான் இந்த சம்பத்தை சொன்னேன். இசை கேட்டால் புவியும் அசைந்தாலும் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார் எம்.எஸ்.வி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“