தமிழ் சினினிமாவின் க்ளாசிக் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் எம்.எஸ..விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று பெயரேடுத்துள்ள இவர் எம்.ஜி.ஆர் தொடங்கி தற்போதைய நடிகர்கள் வரை பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதேபோல் இன்றைய இளம் இமையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து தில்லு முல்லு படத்தில் இசையமைத்துள்ள எம்.எஸ்வி தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வெற்றியை கொடுத்துள்ளார்.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் இசையமைப்பாளர்கள் ஒரு டியூன் வெளியிட்டால் இது இந்த பாடலின் சாயல்போல் உள்ளது, ஆங்கில பாடலின் காப்பி என்று சமூகவலைதளங்களின் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்து விடுகின்றனர். ஆனால் டெக்னாலஜி வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்திலும் இந்த மாதிரியான காப்பி இருந்திருக்கிறது. இதற்கு இளையராஜா இசையமைத்த பல பாடல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று நெட்டிசன்கள் பலரும் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான் இசையமைத்த சில பாடல்களை எங்கிருந்து எடுத்தேன் என்பது பற்றி அவரே கூறிய பழைய நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெகாஸ்டார் புரோடக்ஷன்ஸ் என்ற யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பேசும் எம்.எஸ்.வி, தான் இசையமைத்த ஜெமினி கணேசனின் காலங்களில் அவள் வசந்தம், சிவாஜினியின் நான் ஒரு காதல் சன்னியாசி, பூ மாலையில் ஓர் மல்லிகை உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.
அதேபோல் தனது ஹார்மோனியத்தில் அந்த பாடலுக்கான டியூனையும் அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அந்த பாடலின் ஒரிஜினல் டியூனையும் இசையமைத்து காட்டியுள்ளார். அதேபோல் நானும் இளையராஜாவும் இணையமைத்த படங்களில் இது மாதிரிய பல பாடல்கள் பயன்படுத்தியுள்ளோம் என்று கூறும் எம்.எஸ்.வி ஒரு திருடன் திருடலாம் ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil