படத்தின் க்ளைமேக்ஸ் கட்சியில், உருக்கமான நடிப்பை பார்த்த இசை கலைஞர்கள் கண்ணீரில் மூழ்கிய நிலையில், அவர்களுக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.வி கொடுத்த நோட்ஸ் நனைந்துள்ளது. இதனால் வாசிக்க முடியாமல் திணறிய கலைஞர்களுக்கு எம்.எஸ்.வி புது ஐடியா கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்களாக வலம் வந்த விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இசையமைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், ஒரு கட்டத்தில் இருவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த பிரிவுக்கு முக்கிய காரணம், ராமமூர்த்தி செய்த ஒரு செயல்தான் என்று எம்.எஸ்.வி மகள் லதா மோகன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது மெல்லிசையினால் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம.ஜி.ஆர் தொடங்கி சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த எம்.எஸ்.வி தொடக்கத்தின் டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்து வந்தார்.
இருவரும் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த போதும் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், எம்.எஸ்.வி தனியாக தனது பெயரை நிலைநாட்டிய நிலையில், டி.கே.ராமமூர்த்தி பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் எம்.எஸ்.வி அளவுக்கு பிரபலமாகவில்லை. பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி, 1966-ம் ஆண்டு சந்திரபாபு இயக்கத்தில் தட்டுங்கள் திறக்கப்படும் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சாவித்ரி, கே.ஆர்.விஜயா, சந்திரபாபு, ஏ.வி.எம் ராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், க்ளைமேகஸ் கட்சியில், பின்னணி இசை அமைக்கும்போது, எம்.எஸ்.வி அனைத்து கலைஞர்களுக்கும் நோட்ஸ் கொடுத்துள்ளார். பின்னணி இசை அமைக்க ரெடியானபோது, உருக்கமான நடித்திருந்த நடிகர்களின் நடிப்பை பார்த்து கண்ணீரில் மூழ்கியபோது, இசைக்காக எம்.எஸ்.வி கொடுத்த நோட்ஸை மறந்து இசையமைத்துள்ளனர்.
இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.எஸ்.வி, உடனடியாக அனைத்து இசை கலைஞர்களையும் ஸ்கிரீன் பார்க்காமல் திரும்பி, உட்கார்ந்து அந்த காட்சிக்கு இசையமையுங்கள் என்று கூறியுள்ளார். அந்த வகையில் வந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றருந்தது. இன்றும் பாராட்டப்படும் ஒரு பின்னணி இசை காட்சிகளில் இந்த காட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“