ரஜினி மீது ஒரு தலை காதல்; முரட்டுக்களை நடிகை இப்போ பெரிய அரசியல் பிரபலம்: இவர் செய்த சாதனை தெரியுமா?

முரட்டுக்களை படத்தில் நடித்த நடிகை, நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றுள்ளது தமிழ் ரசிகர்கள் பலரும் அறியாத ஒரு தகவல்.

முரட்டுக்களை படத்தில் நடித்த நடிகை, நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றுள்ளது தமிழ் ரசிகர்கள் பலரும் அறியாத ஒரு தகவல்.

author-image
WebDesk
New Update
Murattukkalai 1

சினிமா உலகம் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், பழைய படங்களுக்கு இன்னும் வரவேற்பு இருந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக, தற்போது வெளியாகும் புதிய படங்களை விடவும், ரீ-ரிலீஸ் ஆகும் படங்களுக்கும் பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகிறார். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படங்களுக்கு வரவேற்பு இன்னும் கூடுதலாகவே கிடைத்து வருகிறது.

Advertisment

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்போதுவரை நீங்காத இடம் பிடித்துள்ள ஒரு படம் தான் முரட்டுக்காளை. 1980-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் கிராமத்து இளைஞரான ஆக்ஷன் செண்டிமென்ட் என கலக்கி இருப்பார். அதேபோல் மக்கள் கலைஞர் என்று அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் வில்லனாக கலக்கிய படமும் இந்த முரட்டுக்காளை தான். பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி, எஸ்.பி முத்துராமன் இயக்கிய இந்த படத்தை ஏ.வி.எம்.தயாரித்தது. 

பாராட்டை பெற்ற சண்டைக்காட்சி

ஜூடோ ரத்னம் சண்டைக்காட்சிகள் இந்த படத்தில் அதிகமாக பேசப்பட்டது. குறிப்பாக ஓடும் ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி இன்றைக்கு பார்த்தால் கூட கவனம் ஈர்க்கும் அளவுலுக்கு அமைத்திருப்பார்கள். அதேபோல், இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடலகளையும் பஞ்சு அருணாச்சலம் தான் எழுதியிருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. 

Advertisment
Advertisements

Murattukkalai

குறிப்பாக படத்தின் முதல் படலான ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்ற பாடல் இன்றைக்கும் பலரது ரிங்டோனாக ஒளித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் இருக்கும் மற்றொரு பாடல் தான் ‘மானே மச்சான்’ ஒருதலை காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த பாடல், சோகமான பின்னணியில் அமைந்திருக்கும். இந்த பாடல் காட்சியில் நடித்துள்ள செளந்தர்யம் (சுமலதா) காளையனை (ரஜினிகாந்த்) ஒருதலையாக காதலிப்பார். ஆனால் காளையன் கண்ணம்மாவை (ரதி அக்னிகோத்ரி) காதலிப்பார்.

சுமலதா: திரைமாறிய பறவைகள் படத்தில் அறிமுகம்

ஒரு கட்டத்தில், கொலை பழியால் காளையன் காட்டுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும்போது அவரை தேடி செல்லும் சௌந்தர்யம் பாடும் பாடல் தான் ‘மாமன் மச்சான்’. இந்த சௌந்தர்யம் கேரக்டரில் நடித்துள்ள நடிகை சுமலதா இப்போது பெரிய அரசியல் பிரபலம். முன்னணி நடிகராக இருந்து மறைந்த ஒருவரின் மனைவி என்பது தமிழ் ரசிகர்கள் பலரும் அறியாத ஒரு தகவல். 1979-ம் ஆண்டு வெளியான திரைமாறிய பறவைகள் படத்தின் மூலம் தான் சுமலதா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அவரது 2-வது படமாக அமைந்தது தான் முரட்டுக்காளை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்துடன் கழுகு, சிவாஜியுடன் தீர்ப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். கடைசியாக, தமிழில் 1983-ம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்திய மொழிகளில் நடித்துள்ள சுமலதா பிரபல கன்னட நடிகராக அம்ரீஷின் மனைவியாவார். 1991-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது. 

சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற முதல் பெண் சுமலதா

1978-ம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான ப்ரியா என்ற படத்தில் ரஜினிகாந்த் அம்ரீஷ் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தமிழகத்தில் பிறந்த சுமலதா கன்னட நடிகரை திருமணம் செய்துகொண்ட நிலையில், அரசியலிலும் கால் பதித்து வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார். 2018-ம் ஆண்டு அம்ரீஷ் மரணமடைந்த நிலையில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுமலதா. அவருக்கு கன்னட நடிகர் யஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். 

இதன் மூலம் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்ற சுமலதா, தற்போது பா.ஜ.க.வில் அங்கம் வகிக்கிறார். இவரது மகன் அபிஷேக் கவுடா கன்னட சினிமாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: