/tamil-ie/media/media_files/uploads/2020/04/GV-Prakash-Saindhavi-Blessed-with-a-baby-girl.jpg)
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் – பாடகி சைந்தவி
தமிழ் திரை உலகின் இசை ஜோடியான ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து வந்த நிலையில் திடீரென நடிகராக அவதாரம் எடுத்தார். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகின்றன.
தற்போது ஜி.வி பிரகாஷ் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வீர தீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார்.
ஜி.வி பிரகாஷ் பாடகி சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். பள்ளியில் ஒன்றாக படித்த இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு, அன்வி என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்தை பெற முடிவு செய்து இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.