டைவர்ஸ் வாங்கிய அண்ணாத்தே பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Tamil CInema Update : எங்களின் நலம் விரும்பிகள் இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Tamil Cinema Music Director D.Imman Update : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமகமான இவர், தொடர்ந்து விசில். ஏபிசிடி, தலைநகரம், நான் அவனில்லை, கும்கி, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், விஸ்வாசம், நம்ம வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

கிராமத்து கதைகளுக்கு இசையமைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இமான் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்ற நிலையில், பின்னணி இசைக்காக இமான் பாராட்டுக்களை பெற்றிருந்தார். தற்போது சூர்யாவில் எதற்கும் துணிந்தவன் படம் உட்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இசை மட்டுமல்லாது படங்களில் பாடல்களையும் பாடி வரும் இமான், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருதும் கும்கி படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதும் பெற்றுள்ளார். மேலும் சன்டிவியின் கோலங்கள், திருமதி செல்வம், வசந்தம், உறவுகள் உள்ளிட்ட பல சீரியல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இமான் தற்போது தனது மனைவி மோனிகாவை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனது நலம் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர் அனைவருக்கும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கான நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்வதால், நானும் மோனிகாவும், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதாக நவம்பர் 2020-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக கணவன் மனைவியாக வாழ முடியாது என்று முடிவெடுத்துவிட்டோம். எங்களின் நலம் விரும்பிகள் இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் புரிதலுக்கும் அன்பு மற்றும் ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு மோனிகாவை திருமணம் செய்துகொண்ட இமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதவே விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் விவாகரத்து பெற்று ஒருவருடம் கழித்து தற்போது இமான் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema music director d imman twitter post about his life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express