/indian-express-tamil/media/media_files/to2vIsbEXilrsROFRmeW.jpg)
இசையமைப்பாளர் பிரவீன்குமார் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.
Tamil Cinema News: தமிழில் ’இராக்கதன்’, ’மேதகு’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பிரவீன்குமார். 28 வயதான இவர் கடந்த சில நாட்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பிரவீன்குமார் அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது.
தனது இளம் வயதிலே இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.