ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாடல் பாட இருந்ததாக சமீபத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆா.ரஹ்மான் கூறிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரேடுத்தவர் ஷங்கர். 90-களில் வெளியான ஜெண்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து காதலன், இந்தியன், முதல்வன், பாய்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். இதில் முதன் முதலாக அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்த படம் சிவாஜி. 2007-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது.
சிவாஜி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் எந்திரன். முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த இந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால், கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். படத்திற்கு ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
ரூ300 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்'தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தில், பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து நானும் பாடல் பாடுவதாக இருந்தது. இது குறித்து அவரிடம் பேசிய போது அவரும் இந்த படத்தில் பாடல் பாடுவதற்காக ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதால் அது முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எந்திரன் படத்தில், மைக்கேல் ஜாக்சன் பாடல் பாட இருந்தாரா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“