ஏம்மா, வைரமுத்து தங்கமான ஆளு, அவர் மேல குத்தம் சொல்லலாமா? சின்மயிடம் நேரடியாக கேட்ட கங்கை அமரன்; த்ரோபேக் வீடியோ!

அநியாயத்தை எதிர்த்து ஒரு பெண் பேசுகிறாள். அவருக்கு சப்போர்ட் பண்ண நாம் ரெடி. உதமமான பெண் தனக்கு நடந்த அநியாயத்தை சொல்லும்போது அதை எடுத்துக்கொள்ளாத சட்டத்தையும், அதற்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் எதிர்க்கிறேன் என கங்கை அமரன் கூறியுள்ளார்.

அநியாயத்தை எதிர்த்து ஒரு பெண் பேசுகிறாள். அவருக்கு சப்போர்ட் பண்ண நாம் ரெடி. உதமமான பெண் தனக்கு நடந்த அநியாயத்தை சொல்லும்போது அதை எடுத்துக்கொள்ளாத சட்டத்தையும், அதற்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் எதிர்க்கிறேன் என கங்கை அமரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Gangai amaran and Chinami

பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து, மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு, சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கங்கை அமரன், வைரமுத்து நல்ல மனிதன் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பாடகியாவும், டப்பிங் கலைஞராகவும் பிரபலமானவர் தான் சின்மயி. தனது குரலில் பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார். சின்மயி கொடுத்த இந்த புகார் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரைத்துறையில் இருப்பவர்களே சின்மயிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். ஆனாலும் சின்மயி தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்,

இதனிடையே சின்மயிக்கு ஆதராக, காலாட்டா சேனலில் பேசிய கங்கை அமரன், சின்மயி வீழா என்றவுடன் உடனடியாக வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன். இதற்கு காரணம், அவர் பட்ட கஷ்டம், ஒரு பின்னணி பாடகியாக வர கஷ்டப்பட்டது, பெரிய ஆளாக வர கஷ்டப்பட்டது, பெரிய ஆளாக வந்தவுடன் நடந்த அசிங்கம், அந்த அசிங்கத்தை வெளியில் சொன்னவுடன், அரசியல் ரீதியாக எதை மாற்றினார்களோ, அவர் உத்தமன் மாதிரியும், இவங்க தப்பு பண்ண மாதிரியும், சொல்லி ஒரு அசிங்கமான சூழ்நிலையில் நின்றோம்.

இந்த சூழ்நிலையில் சின்மயிக்கு யாரும் உதவவில்லை. நான் டெல்லியில், இந்திய மகளிர் பேரணிக்கு தலைவியாக இருக்க கூடிய வானதி ஸ்ரீனிவாசனை சந்தித்து சொன்னேன். அவர், சின்மயிக்கு தமிழக மகளிர் பேரணியில், போஸ்டிங் தருவதாக சொன்னார். ஆனால அவரது அம்மா அதற்கு சரியாக ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை. அநியாயத்தை எதிர்த்து ஒரு பெண் பேசுகிறாள். அவருக்கு சப்போர்ட் பண்ண நாம் ரெடி. உதமமான பெண் தனக்கு நடந்த அநியாயத்தை சொல்லும்போது அதை எடுத்துக்கொள்ளாத சட்டத்தையும், அதற்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் எதிர்க்கிறேன்.

Advertisment
Advertisements

எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு வர வேண்டும். எனது நண்பர் என்றால் அவர் செய்யும் தவறை கேட்டகாமல் இருக்க முடியுமா? அவர் என் நண்பர் அவரை பற்றி குறை சொன்னால் அவ்வளவு தான் என்று கேட்க முடியுமா? அநியாயம் நடந்தது நடந்தது தான். உலகத்திற்கு தெரிந்தது தான். அசிங்பப்டுத்தியது உண்மைதான். அதற்கான தண்டனை என்ன? என் நண்பரை பற்றி நானே எப்படி சொல்வது என்று கேட்டால், நான் இப்போது அவருக்கு ஆதரவாக சின்மயிடம் கேள்வி கேட்கிறேன்.

ஏம்மா வைரமுத்து தங்கமான ஆளு, யாரையும் தப்பா முகத்தை பார்த்து பழகியதே கிடையாது. அப்படிப்பட்ட ஆள் மேல் நீ குற்றம் சொல்லலாமா? என்ன உத்தமமான ஆளு, அந்தி மழை பொழிகிறது, ஒவ்வொரு துளியிரும் உன்முகம் தெரிகிறது என்று எழுதினார். மழைத்துளியை குருடணால் எப்படி பார்க்க முடியும்? அந்த மாதிரி ஆளை அப்படி சொல்லமாமாமா? அவர் ஒரு அதிசய பிறவியான ஒரு ஆள். அவரைப்பற்றி அவரே சொல்லிக்கொள்வார். நல்ல கவிஞர் என்பது நிச்சயமாக சத்யமாக உண்மைதான். ஆனால் நல்ல மனிதர் இல்லை என்று கங்கை அமரன் கூறியுள்ளார். 

Gangai Amaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: