/indian-express-tamil/media/media_files/am4Wjdwwam1LfxHMqUk2.jpg)
ஜி.வி பிரகாஷ் - சைந்தவி
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவரது மனைவி சைந்தவி சமீபத்தில் பிரிவதாக அறிவித்த நிலையில், இவர்கள் பிரிவு குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ள கருத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் என்ற அடையாளத்துடன் 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பொல்லாதவன்,ஆடுகளம்,தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல்,மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ்,2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து அடியே,நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளி தோழியும் பாடகியுமான சைந்தவி என்பரை திருமணம் செய்துகொண்டார். அந்நியன் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சைந்தவி கடைசியான மார்க் ஆண்டனி என்ற படத்தில் பாடியிருந்தார். ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில்,தற்போது இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் விவாகரத்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், அக்கா மகன், மருமகன் என்ற உறவு இருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் இடையே நெருக்கமான உறவுகள் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் உதவி இல்லாமல் தான் ஜி.வி. திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகே ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து வாய்ப்பு வந்தது.
இப்படி இருக்கும்போது ஜி.வி – சைந்தவி விவாகரத்து குறித்து ஏ,ஆர்.ரஹ்மான் பேசினார், விஜய் பேசினார் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளலே முடியாது. இவர்கள் விவாகரத்து விஷயத்தில் தனுஷை இழுத்து வைத்து செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். யார் குடும்பம் பிரிந்தாலும், இவர் தான் காரணம் என்று சொல்வது ரொம்பவும் அபத்தமாக இருக்கும். ஜி.வி. – சைந்தவி விவகாரத்தில் ஜி.வி.அம்மா கூட தலையிடவில்லை என்பது தான் உண்மை என்னதான் நட்பாக பழகி இருந்தாலும் குடும்ப விஷயத்தில் தலையிட மாட்டார்கள் என்பது தான் உண்மை என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.