/indian-express-tamil/media/media_files/2025/02/13/LFDBfSpDxKf8W88zmrK8.jpg)
தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களை யூடியூப், சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளாக இருப்பவர் இளையராஜா. தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், 80 வயதை கடந்த பின்னும் இன்றைய இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் இவர் இசையமைப்பில் 80-90 களில் வெளியான பாடல்கள், இன்றைய திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
க்ளாசிக் ஹிட்டடித்த இந்த பாடல்கள் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், புதிய திரைப்படங்களுக்கு பழைய பாடல்கள் பயன்படுத்தும் நிகழ்வு தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த பாடல்களை பயன்படுத்தும்போது உரிமம் தொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகிறது. அந்த வகையில், பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கு ஒன்றில், சாட்சியம் அளிப்பதற்காக, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜாகியுள்ளார்.
இளையராஜா இசையமைத்த குணா, தேவர் மகன், உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களை, யூடியூப் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி கடந்த 2010-ம் ஆண்டு மியூசிக் மாஸ்டமர் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரரான சேர்க்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, சாட்சியம் அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். சாட்சியம் அளிப்பதற்கக வந்த இளையராஜா உடனடியாக தனது தரப்பு சாட்சியங்களை சமர்பித்துவிட்டு, நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.
இதனிடையே நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்த இசையமைப்பாளர் இளையராஜா, எனக்கு எத்தனை பங்களாக்கள் இருக்கிறது என்பது தெரியாது. சொந்தமாக ஸ்டூடியோ கூட கிடையாது. முழு ஈடுபாடு இசையில் உள்ளதால் உலகளாவிய பொருட்கள் பற்றி எனக்கு தெரியாது. பெயர் புகழ் செல்வம் என எல்லாமே சினிமா மூலம் கிடைத்தது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.