Advertisment

இசைஞானி முடிந்தது... அடுத்த டார்கெட் சூப்பர் ஸ்டார் : இளையராஜா பட விழாவில் தனுஷ் பேச்சு

தமிழ் சினிமாவில் இதுவரை 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, பல பாடல்களை பாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Dhanush Ilayaraja Kamalhaasan

தனுஷ் - இளையராஜா - கமல்ஹாசன்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ள நடிகர் தனுஷ், படத்தின் நிகழ்ச்சியில் பேசும்போது தான் 2 பேரின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் தனது திரை இசை பயணத்தை தொடங்கிய இவர், அடுத்த சில வருடங்களில் இளையராஜா இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை என்ற நிலை இருந்தது. 1975 முதல் 2000 வரை வெளியான பல படங்கள் இளையராஜாவின் இசையில் வெளியான படங்கள் தான்.

ரஜினிகாந்த் கமல்ஹாசன் தொடங்கி, கார்த்திக், மோகன், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் தனது இசையின் மூலம் வெற்றிகளை கொடுத்துள்ள இளையராஜா, 80 வயதை கடந்த பின்னும் தற்போதுவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்து நிலைத்து நிற்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் இதுவரை 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், பல பாடல்களை பாடியுள்ளார்.

இதனிடையே தற்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார். தனது வாழ்க்கை வரலாற்று படமான இளையராஜா படத்திற்கு அவரே இசையமைக்க உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்தை நடிகர் கமல்ஹாசன் பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

Ilayaraja Biopics

இந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் இளையராஜா, கமல்ஹாசன், கங்கை அமரன், சந்தான பாரதி, வெற்றிமாறன், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், சிறுவயது முதல் நான் இளையராஜாவாக நடிக்க வேண்டும் என்று நினைத்து அதற்காக பயிற்சிகள் எடுத்துக்கொண்டேன். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் தவம் கிடந்தேன்.

இப்போது அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. வாழ்க்கை வரலாறு படம் என்றால் நான் இருவரது வாழ்க்கையை படமாக்க எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒன்று இளையராஜா இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளார். தனுஷின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் வாழ்க்கை படத்திற்கு அடிப்போடுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush Isaignani Ilayaraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment