/indian-express-tamil/media/media_files/2024/11/06/bfiRVHHhSwYZ3H8dST9L.jpg)
இந்த தேகம் மறைந்தாலும், இசையால் மலர்வேன் என்று பாடிய எஸ்.பி.பி. இப்போது இல்லை என்றாலும், அவரது பாடல்கள், இன்றும் ரசிகர்களை இரவில் தூங்கவைத்துக்கொண்டு இருக்கிறது, சாதாரணமாக பாடக்கூடிய ஒரு பாடலை, தனது முயற்சியால் வித்தியாசமாக பாடி அசத்தக்கூடிய எஸ்.பி.பி, ஒரே பாடலில் 4 வித்தியாசமான குரலில் பாடி அசத்தியுள்ளார்
தமிழ் சினிமாவில், பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகராக வலம் வந்தவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். எம்.ஜி.ஆர் நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார், அதன்பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்.
அதேபோல், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள எஸ்.பி.பி ஒரு பாடலுக்கு 4 வித்தியாசமான குரல் கொடுத்தது குறித்து இசையமைப்பாளர் வீரமணி கண்ணன், ஆதன் சினிமா யூடியூப் சேனலில் பேசியுள்ளார். பாடகர் எஸ்.பி.பி 70 வயதை கடந்திருந்தாலும், அவரது குரல் என்னும் இளமை என்பது போலத்தால் இருந்தது. ஆனால் அவரது இழப்பு, ஈடு செய்ய முடியாதது.
எஸ்.பி.பி ஒரு பாடலுக்கு 4 வேரியேஷன்களில் பாடியுள்ளார். அதனால் தான் கமல்ஹாசனும் அவரை அந்த அளவுக்கு விரும்பியுள்ளார். சகலகலா வல்லன் படத்தில் வரும் இளமை இதோ இதோ என்ற பாடலை கவனித்தால் தெரியும். அந்த காலத்தில் மிக்ஸிக் இல்லாத காலக்கட்டம். பாடல்கள் லைவ் ரெக்கார்டிங் தான் செய்வார்கள். அதிலும், அவர் பாடலில் வித்தியாசமான சில குரல்களை பயன்படுத்தியிருப்பார்கள். அதேபோல், எஸ்.பி.பி குரல் எல்லா வகையான பாடல்களுக்கும் ஒத்துபோனது. சோகம், அழுகை, மகிழ்ச்சி என அனைத்தும் இவர் குரலுக்கு சிறப்பாக இருந்தது.
எஸ்.பி.பி கடவுளின் குழந்தை, நான் இசையமைத்த ஒரு பாடலை அவர் பாடும்போது நான் அங்கு இல்லை. ஆனால் அவர் பாடலை பாடி முடித்தவுடன் எனக்கு போன் செய்து, நான் பாடலை பாடிவிட்டேன். நான் ஏதாவது தவறாக பாடியிருந்தால் சொல்லு, மீண்டும் வந்து பாடி கொடுக்கிறேன் என்று சொன்னார். அப்போது நான் தயங்கியபோது, இல்லை இல்ல, நீ அருமையா டியூன் போட்ருக்க, அதற்கு ஏற்றபடி நான் பாட வேண்டும் அல்லவா? கை நீட்டி காசு வாங்குறேன்ல என்று எஸ்.பி.பி சொன்னதாக, வீரமணி கண்ணன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us