இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாரளாக பல வெற்றிப்படங்களை கொடுத்த யுவன் சங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1970-களில் இறுதியில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாராள அறிமுகமானவர் இளையராஜா. தனது இசை மற்றும் பாடல்களின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவருக்கு, கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் சங்கர் ராஜா என 3 பிள்ளைகள் இருந்தனர். இதில் பாடகியாக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பவதாரணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.
அதேபோல் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவரால் முன்னணி இசையமைப்பாளராக வளர முடியாத நிலையில், அவரின் சகோதர்ர் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
1991-ம் ஆண்டு பார்த்திபன் – சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாரளாக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்து, கல்யாண கலாட்டா, உனக்காக எல்லாம் உனக்காக, தீனா, நந்தா, துள்ளுவதோ இளமை, 7ஜி ரெய்ன்போ காலணி, மன்மதன், புதுப்பேட்டை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் தற்போது வஜய் நடித்து வரும் கோட் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் வெளியான சூரியின் கருடன் படத்திற்கும் யுவன் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பின்னணி இசை பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இசையில் தமிழ் சினிமாவின் முன்னணியில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ100 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“