விஜயின் லியோ படத்தில் தனது காட்சிகளை முடித்து சென்னை திரும்பியுள் இயக்குனர் மிஷ்கின் லியோ படம் குறித்து வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கின் தனது காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சண்டை பயிற்சியாளர்கள் அன்பு அறிவு ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மிஷ்கின் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
Advertisement
இன்று நான் காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். 500 உறுப்பினர்களை உள்ளடக்கிய -12 டிகிரி செல்சியஸில் குளிரில் லியோ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் எனக்கான காட்சிகளை முடித்துவிட்டேன். சண்டைக் காட்சியை சிறிப்பாக படமாக்க சண்டை பயிற்சியாளர்கள் கடுமையாக உழைத்தனர், எனக்குக் கிடைத்த அன்பும் மரியாதையும் என்னை ஆச்சரியப்படுத்தியது.
நல்ல பயிற்சி பெற்ற இயக்குனரான எனது லோகேஷ், ஒரு ராணுவ வீரரைப் போல அன்பு மற்றும் கண்டிப்புடன் களத்தில் செயல்படுகிறார். எனது கடைசி காட்சியை படமாக்கிய பிறகு அவர் என்னை கட்டிப்பிடித்தார், நான் அவரது நெற்றியில் முத்தமிட்டேன். இந்தப் படத்தில் எனது அன்புச் சகோதரர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன், அந்த காதலை என்னால் மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
லியோ படத்தில் நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாளை சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடினர். அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, “கோலிவுட்டை தனது கிளாசிக் கிளாசிக் படங்களால் மறுவரையறை செய்தவருக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு ப்ளடி ஸ்வீட் அட்வென்ச்சராக இருக்கட்டும் என பதிவிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/